HybridAnalyzer Tamil: world fact

Hot

Showing posts with label world fact. Show all posts
Showing posts with label world fact. Show all posts

Monday, 18 January 2021

இது தெரிஞ்சா நீங்களும் துப்பாக்கி வைத்து கொள்ளலாம்!

January 18, 2021 0

 துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன?, துப்பாக்கி வைத்திருக்க தகுதி உடையவர்கள் யார்? என்பது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.


துப்பாக்கி உரிமம்:

தமிழகத்தில் நடந்துள்ள சில துப்பாக்கி சூடு சம்பவங்களில் முறைப்படி உரிமம் பெற்ற துப்பாக்கிகள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய சம்பவங்களினால் துப்பாக்கி உரிமம் பெற்றவர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிவர கண்காணிக்கிறார்களா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.



 அதே நேரத்தில் நிறைய பேர் மனதில் துப்பாக்கியை யார் யார் வாங்க முடியும் என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. அதற்கான நெறிமுறைகள் பின்வருமாறு.

எங்கு, எப்படி உரிமம் பெறுவது:

ஒருவருக்கு துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் தேவைபட்டால், அவர் சென்னையை சேர்ந்தவராக இருந்தால் காவல் ஆணையர் அலுவலகம் அல்லது மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட நபர் நேரடியாக அந்தந்த அலுவலகத்தில் தனது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.



அந்தப் விண்ணப்பத்துடன் குறிப்பிட்ட நபரின் அடையாள சான்று, இருப்பிட சான்று, மனநல தகுதி சான்று மற்றும் சொத்து விவரங்கள் அடங்கிய கோப்புகளை இணைக்க வேண்டும். அதனுடன் தேவைக்கு ஏற்ப வங்கியில் பணப் பரிவர்த்தனை விவரங்கள், வருமான வரி தொடர்பான விவரங்கள் போன்றவற்றையும் இணைக்க வேண்டி இருக்கும். ஒருவேளை கொலை மிரட்டல் அல்லது வேறு ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால் அதைப்பற்றிய காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்ததற்கான  FIR - முதல் தகவல் அறிக்கை நகலையும் இணைக்கலாம்.

எப்போது உரிமம் கிடைக்கும்:

அந்த அனைத்து ஆவணங்களையும் பரிசோதனை செய்யும் அதிகாரிகள் அவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்து, விண்ணப்பதாரரை நேரடியாக சந்தித்து விசாரணை நடத்துவார்கள். இந்த விசாரணைகளின் முடிவில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு துப்பாக்கி தேவையா அவர் துப்பாக்கி வைத்திருக்க தகுதி உடையவரா என்பதை முடிவு செய்வார்கள்.



இதன் ஒரு பகுதியாக துப்பாக்கி உரிமத்திற்கான விண்ணப்பித்தவரின் மேல் ஏதேனும் குற்ற வழக்குகள் இருந்தால் அவரது விண்ணப்பத்தை உடனடியாக நிராகரித்து விடுவார்கள். அதேபோல வேறு ஏதேனும் சந்தேகங்களை முன்னிறுத்தியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பத்தை நிராகரிக்க முடியும்.

இந்த அனைத்து விதிமுறைகளையும் ஒருவர் சரிவர கடைபிடித்து தேர்ச்சி பெறும் போது அவருக்கு துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் வழங்கப்படும்.

உரிமம் கிடைத்த பிறகு செய்ய வேண்டியவை:

துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் கிடைத்து மூன்று மாதங்களுக்குள் அந்த உரிமத்தின் அடிப்படையில் துப்பாக்கியை சம்பந்தப்பட்ட நபர் வாங்கிவிட வேண்டும். அதனுடன் 10 தோட்டாக்கள் வரை வாங்கிக் கொள்ளலாம். அந்த ஒவ்வொரு தோட்டாவிற்கும் அந்த தோட்டாவை வாங்கியவர் தான் பொறுப்பு.

உரிமத்தின் செல்லுபடி காலம்:

 பொதுவாக துப்பாக்கி உரிமத்தின் செல்லுபடி காலம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள். அந்த உரிமம் காலாவதியாகும் நாளிருக்கு முன்பாக அதனை புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்க தவறினால் அந்த உரிமம் செயல் இழந்ததாகக் கருதப்படும்.

முக்கிய குறிப்புகள்:

 உரிமம் வைத்திருப்பவர் வெளிமாநிலம் செல்லும்போது பயணம் பற்றிய தகவலை காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்.

ஒருவேளை வெளிநாடு செல்வதாக இருந்தால் தனது துப்பாக்கியை தற்காலிகமாக காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.



தனக்கு துப்பாக்கி தேவையில்லை என்று நினைக்கும் போது அதனை அரசின் அனுமதியோடு செயல்படக்கூடிய துப்பாக்கி விற்பனை மையங்களில் நிரந்தரமாக ஒப்படைக்கலாம்.

துப்பாக்கியை வாங்குவதற்காக போலியான ஆவணங்களை சமர்ப்பித்தாலோ அல்லது வாங்கிய துப்பாக்கியை வைத்து வனவிலங்குகள் அல்லது வன பகுதிகளில் உள்ள மரங்களை சேதப்படுத்தினாலோ அவர் மீது அதற்கான பிரிவுகளில் குற்ற வழக்குகள் தொடர முடியும்.

Read More

Tuesday, 12 November 2019

தட்டச்சு இயந்திரத்தை டகடகவென அடிக்கும் ஆவிகள்! அமெரிக்காவின் மர்மமான நூலகம் | Ghost Library in America

November 12, 2019 1

அமெரிக்காவின் வயோமிங் மாநிலத்தில் உள்ள கிரீன் ரிவர் நகர நூலகம் அமானுஷ்யமான நிகழ்வுகள் மிகவும் பெயர் பெற்றது. நூலகத்தில் நடக்கக்கூடிய மர்மமான நிகழ்வுகளை பதிவு செய்வதற்காக பேய் பதிவேடு என்ற ஒரு தனி கையேட்டையே வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். கடந்த 1998 முதல் இங்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்களை அந்தப் பதிவேட்டில் பதிவு செய்து வருகிறார்கள்.

1980-ஆம் ஆண்டு இந்த நூலகம் திறக்கப்பட்டது போது அதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால், 1860 காலத்தைச் சேர்ந்த ஒரு கல்லறை பகுதியில் நூலகம் கட்டப்பட்டது தான் இந்த மர்ம நிகழ்வுக்கு காரணம் என்று கூறுகிறார்கள். நூலக கட்டிடத்தில் இரவில் படபடவென்று அடித்துக் கொண்டு ஒரு ஓசை ஓடுவதாக அங்குள்ள காவலர்கள் கூறுகின்றனர். அங்குள்ள கலைப்பிரிவில் பகல் நேரத்தில் ஒளிப் புள்ளிகள் மிதப்பதை கண்டதாக சிலர் சொல்கிறார்கள்.

ஒரு சமயம் நூலக ஊழியை ஒருவர் தனது கணினியில் பணிபுரிந்து கொண்டிருந்தார் அப்போது அவர் அனிச்சையாக சில நொடிகள் வேறு பக்கம் நோக்கம் விட்டு மீண்டும் தனது கணினி திரையை பார்த்தபோது அதில் அந்தப் பெண்ணின் பெயர் பெரிய எழுத்துக்களில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இத்தனைக்கும் அப்படி பெயரை தட்டச்சு செய்வதற்கு அவர் கணினியில் அப்போது வசதி கிடையாது.

நூலகத்துக்கு கணினியில் வரும் முன் அங்கு மின் தட்டச்சு எந்திரங்கள் தான் பயன்பாட்டில் இருந்துள்ளது. சில சமயங்களில் தகதகவென்று அவை தானாக அடிக்க தொடங்குமாம். பெரும்பாலும் தட்டச்சு இயந்திரத்தில் எந்த பேப்பரும் இல்லாதபோதுதான் இப்படி தானாக அடிப்பது நடக்கிறது. எனவே ஆவிகள் எதுவும் செய்தியை சொல்லவில்லை. பின் அவை என்ன தட்டச்சு செய்தன என தெரியவில்லை. தட்டச்சு இயந்திரத்தில் தாளை சொருகிவிட்டு சில ஊழியர்கள் பொறுமையாக காத்திருந்து பார்த்தார்கள், அப்போது தட்டச்சு இயந்திரம் தானாக அடிக்கவில்லை. ஒருவேளை ஆவிகளுக்கு மூடு இல்லை போல

Read More

Saturday, 2 November 2019

லண்டனில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான இறக்கையுடன் கூடிய சிறிய மனித எலும்புக்கூடு!

November 02, 2019 0
19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய பொருட்கள் சேவைகளின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இறக்கையுடன் கூடிய பதப்படுத்தப்பட்ட எலும்புக்கூடு வேற்றுகிரகவாசி என சந்தேகங்கள் எழுந்துள்ளது.

லண்டனில் ஒரு வீட்டிற்கு கீழே சில வித்தியாசமான எலும்புக்கூடுகள் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தியபோது அந்த இடத்தில் இறக்கைகளுடன் கூடிய இதுவரை பூமியில் பார்த்திராத வித்தியாசமான எலும்புக்கூடுகளும் வேறு சில சிறிய பதப்படுத்தப்பட்ட மர்மமான உயிரினங்களின் உடலும், ஜாடிகளில் அடைக்கப்பட்ட மனிதர்களின் இதயம் போன்ற உறுப்புகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் சில வித்தியாசமான பொருட்கள் சுவற்றில் மாற்றும்படி பிரேம் செய்யப்பட்டும் இருந்துள்ளது.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 1800-களில் வாழ்ந்த தாமஸ் தியோடார் மெர்லின் எனும் உயிரியலாளர்-ன் வீடுதான் அது என்றும், அவர் தான் இந்த மர்மமான உயிரினங்களின் உடலை சேமித்து வைத்திருந்தார் என்பதும் தெரியவந்தது. 1960-களில் லண்டனின் அந்த குறிப்பிட்ட பகுதியில் இருந்த பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்டி உள்ளார்கள். அந்த சமயத்தில் இந்த வீடு கைவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த வீட்டின் பாதாள அறையிலிருந்து தான் இவைகள் மீட்கப்பட்டுள்ளது.

தாமஸ் தியோடர் மெர்லின் தனது குறிப்புகளில் எழுதியிருந்ததை, ஓவியர் அலெக்ஸ் சி.எப் என்பவர் முதலில் கண்டறிந்து, அதன் பிறகே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த டைரியில் மேலும் பல புரியாத குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன.

இதைப் பற்றி குறிப்பிட்ட அதிகாரிகள் கூறும்போது, அந்த டைரியில் இருந்த குறிப்புகள் மூலமாகவே இந்த இடத்தை கண்டுபிடிக்க முடிந்தது. எனவே அதில் உள்ள மற்ற குறிப்புகளையும் புரிந்து கொண்டால் இன்னும் பல ரகசியங்கள் வெளிப்பட வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்கள்.

தற்போது கிடைத்த மர்மமான பொருட்கள் ஏலியன் சம்பந்தப்பட்டதாக இருக்குமா என்ற கோணத்திலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
Read More

Monday, 28 October 2019

25 வருடங்களுக்கு பிறகு தன் குழந்தைப் பருவ புத்தகத்தை அருங்காட்சியத்தில் கண்டுபிடித்த பெண்!

October 28, 2019 0
ஒருவர் சிறுமியாக இருந்தபோது தன் பெயரை எழுதிய புத்தகத்தை மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோ அண்ட்ரோஸ் மற்றும் அவரது சகோதரி ஹெனா, இவர்கள் சிறுமிகளாக இருந்தபோது தி சீக்ரட் கார்டன் என்ற புத்தகத்தை வைத்திருந்தார்கள். அப்போது அவர்கள் அந்த புத்தகத்தில் ஹேனா என எழுதியுள்ளார்கள். பின்னர் அவர்கள் வளர்ந்து விட்டதால் அந்தப் புத்தகத்தை சில ஆண்டுகளில் ஆக்ஸ் ஃபார்ம் சேரிட்டி ஃசாப் என்ற அமைப்பிற்கு நன்கொடையாக கொடுத்து விட்டார்கள்.

சமீபத்தில் 35 வயதான ஜோ ஒரு பழைய புத்தக அருங்காட்சியகத்தில் தி சீக்ரட் கார்டன் என்ற பெயர் கொண்ட புத்தகத்தை பார்த்துள்ளார். அந்தப் பெயரைப் பார்த்தவுடன் தன்னுடைய குழந்தைப் பருவம் நினைவிற்கு வரவே அதை திறந்து பார்த்தபோது அவரும் அவருடைய சகோதரி ஹேனாவும் சிறு வயதில் நன்கொடையாக கொடுத்த அதே புத்தகம் தான் அது என்பதை அந்த புத்தகத்தின் முன் பக்கத்தில் இருந்த கையெழுத்து மூலம் கண்டுபிடித்தார்.

அதைப்பற்றி பத்திரிகையாளர்கள் ஜோ-விடம் கேட்டபோது இப்படி ஒரு ஆச்சர்யம் காத்திருக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. இதில் என்னுடைய மற்றும் என் சகோதரியின் பல நினைவுகள் உள்ளது எனக்கூறி, 50 பவுண்டுகள் கொடுத்து அந்த புத்தகத்தை மீண்டும் வாங்கிவிட்டார். 50 பவுண்டுகள் என்பது இந்திய மதிப்பில் சுமார் 4500 ரூபாய் இருக்கும்.
தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
Read More

Tuesday, 1 October 2019

உலகின் மிக சிறிய நாடாக கூறிக்கொள்ளப்படும் மொலோசியா உண்மையில் ஒரு நாடு தானா

October 01, 2019 0

ஏழு கண்டங்களாக பிரிந்து உள்ள நம் உலகில் பல நாடுகள் உள்ளன. இதில் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டது 195 நாடுகள் தான். ஒரு சில நாடுகள் நாடாக ஏற்றுக் கொள்ளாததால் சிலர் 194 நாடுகள் எனவும் குறிப்பிடுவார்கள். இந்த அங்கீகரிக்கப்பட்ட 195 நாடுகளில் மிகச்சிறிய நாடு எது என்று கேட்டால் கண்டிப்பாக வாடிகன் சிட்டி தான் இதன் பரப்பளவு 112 ஏக்கர்கள். 

இவைகள் மட்டுமின்றி மைக்ரோ நேஷன்ஸ் என அழைக்கப்படும் சில நாடுகளும் இந்த உலகில் உள்ளன. மற்ற நாடுகளால் அங்கீகரிக்கப்படாமல் தங்களைத் தாங்களே தனி நாடாக அறிவித்துக் கொள்ளும் சில குறிப்பிட்ட நிலப் பரப்புகளை தான் மைக்ரோ நேஷன்ஸ் என்று கூறுகிறார்கள்.

சரி தற்போது molosia வை பற்றிய தகவல்களை பார்ப்போம்.

Kevin baugh மற்றும் அவருடைய நண்பரான James Spielman என்ற இருவரும் தங்களுடைய 15 வயதில் விளையாட்டுத்தனமாக இப்படி ஒரு தனி நாட்டை உருவாக்கி இதில் ஜேம்ஸ் அரசனாகவும் கெவின் பிரதமராகவும் இருக்கும்படி எண்ணி உள்ளார்கள். இதைப் பின்னாளில் தீவிரமாக கருதிய கெவின் ஒரு நாட்டுக்குரிய அந்தஸ்தை பெற எண்ணி அதற்கான செயல்பாடுகளை தொடங்கியுள்ளார். மேலும் 1999-இல் தன்னை பிரதமராகவும் அறிவித்துக் கொண்டார். ஆனால் இவரது நண்பர் இந்த செயல்பாடுகளில் இருந்து விலகிவிட்டார். ஐக்கிய யூட்டோபிய மாகாணங்களில் molosia-ம் அப்போது உறுப்பினராக இருந்து.

 அமெரிக்காவின் Nevada மகானத்தில்தான் இந்த இடம் உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 6.3 ஏக்கர்கள் இங்கு உள்ள மக்கள் தொகையானது 34 இதில் அவர்களது வளர்ப்புப் பிராணிகளும் அடங்கும்.
பத்திரிக்கையாளர்கள் கெவினிடம் தனி நாடு எனக் கூறிக் கொள்கிறார்கள், பின்பு ஏன் அமெரிக்காவுக்கு வரி செலுத்துகிறார்கள், எனக் கேட்டபோது அவர் கூறியது என்னவென்றால் molosia தனி நாடுதான். நாங்கள் அமெரிக்காவுக்கு கொடுப்பது வரி அல்ல அயல்நாட்டு உதவித்தொகை மற்றும் பங்களிப்பு என கூறி உள்ளார்.

மேலும் molosia-வின் பணம் valora என அழைக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு சூதாட்ட விடுதிகள் பயன்படுத்தப் படும் காயின்கள் போலவே தோற்றமளிக்கும். மேலும், கிழக்கு ஜெர்மனிக்கும் molosia-விற்கும் போர் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார். Micro நேசன்கள் நாடுகளாக அறிவிக்கப்பட்டால் molosia உலகின் மிகச் சிறிய நாடாக இருக்கும் ஆனால் இதை விட மிகச் சிறிய பகுதி ஒன்றும் நாடாக கருதப்படுகிறது.


Principality of the sealand என்ற இந்த இடத்தை பொதுவாக சீலேண்ட் எனக் குறிப்பிடுவார்கள். இரண்டாம் உலகப் போர் சமயங்களில் எதிரி விமானங்களை கண்காணிக்கவும் தாக்குவதற்காகவும் பிரிட்டிஷ் காரர்களால் கடலின் நடுவில் கட்டப்பட்ட ஒரு சிறிய அமைப்பு தான் இது. உலகப் போருக்குப் பிறகு யாரும் இதை கண்டுகொள்ளவில்லை. அந்த சமயத்தில் Michael Bates என்பவர் தன்னை அந்த இடத்திற்கு அரசனாக அறிவித்துக் கொண்டு அதற்கான அரசியல் சாசனங்களையும் வகுத்து 1967-இல் தனிநாடு உரிமை கோரியுள்ளார். மற்ற நாடுகள் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் யுனைடட் கிங்டம் மற்றும் ஜெர்மனியினர் ஏற்றுக்கொண்டனர். இதன் பரப்பளவு 0.004 சதுர கிலோ மீட்டர்கள் தான். மற்றும் இங்கிலாந்து கடல் எல்லைக்குள் தான் இது உள்ளது.

Read More

Friday, 27 September 2019

இலங்கையை பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்! Facts of Sri Lanka In Tamil

September 27, 2019 0

இலங்கை இந்தியா-விற்க்கு மிக அருகாமையில் இருக்கும் ஒரு தீவு நாடு, இதை பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை பற்றி தான் இதில் தொகுத்துள்ளோம்.

1. உலகின் எட்டாவது அதிசயமாக இலங்கை-யின் சீகிரியா யுனெஸ்கோவால் (UNESCO) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2. இலங்கையிலேயே உலகின் முதல் யானை அனாதை இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. (பின்னவெலயில் உள்ளது).

3. இலங்கை அதன் வடிவத்தால் 'இந்து சமுத்திரத்தின் முத்து' என்றும் 'இந்தியாவின் கண்ணீர் துளி' என்றும் அழைக்கப்படுகிறது.

4. இலங்கையில் அதிகளவில் கருவாடு உற்பத்தி செய்யப்படுகிறது.

5. இலங்கையில் உள்ள நுவரெலியா பிரதேசம் 'சிறிய இங்கிலாந்து' (Little England) என்று அழைக்கப்படுகிறது.

6. உலகில் முதன் முதலில் பெண் பிரதமரைக் கொண்ட நாடு இலங்கையாகும்.

7. சிங்கக் கொடி என்றும் அறியப்படும் இலங்கையின் தேசியக் கொடியில் பல்வேறு கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

8. இலங்கை தெற்காசியாவில் இரண்டாவது உயர்ந்த கல்வியறிவு விகிதத்தைக் கொண்டிருக்கிறது. (மாலைத்தீவிற்கு அடுத்ததாக).

9. இங்கு ஹோட்டல் எனக்குறிப்பிடப்பட்ட அனைத்திலும் இரவில் தங்குவதற்கான வசதி காணப்படாது.

10. உலகின் பழமையான, மனிதனால் நடப்பட்ட மரத்தின் தாயகம் இலங்கையாகும். (ஸ்ரீ மகா போதி)

11. உலகின் நான்காவது பெரிய தேயிலை உற்பத்தியாளரும், (சீனா, இந்தியா மற்றும் கென்யாவுக்குப் பிறகு) மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளரும் இலங்கையே ஆகும்.

12. உலகின் மிகப்பெரிய நிலப் பாலூட்டியான யானையையும், மிகப்பெரிய கடல் பாலூட்டியான நீல திமிங்கலத்தை ஒரே நாளில் காணக்கூடிய ஒரே நாடு இலங்கை என்று கூறப்படுகிறது.

Read More