HybridAnalyzer Tamil: tamilnadu

Hot

Showing posts with label tamilnadu. Show all posts
Showing posts with label tamilnadu. Show all posts

Thursday, 22 October 2020

பெரம்பலூர் அருகே கிடைத்த 12 கோடி வருட பழைய டைனோசர் முட்டைகள்!

October 22, 2020 0
12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகள் தமிழ்நாட்டின் பெரம்பலூர் அருகே கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
பெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. 

பெரம்பலூர் அருகே குன்னம் பெரிய ஏரியில் நேற்று மண் எடுத்து கொண்டிருந்தபோது, அம்மோனைட் எனப்படும், கடல்வாழ் நத்தைகளின் படிமங்களும் சிதைவுற்ற நிலையில் கிடைத்துள்ளது. மேலும் அந்த ஏரியில் டைனோசர் முட்டை போல் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்துள்ளன. அதனை புவியியல் ஆய்வாளர் வந்து பார்வையிட்டு, அது டைனோசர் முட்டையா?, இல்லையா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த கடல்வாழ் நத்தைகளின் படிமங்களையும், உருண்டை வடிவிலான படிமங்களையும் வருவாய்த்துறையினர் கைப்பற்றி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும் குன்னம் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்படிமங்களை அதே இடத்திலும் பாதுகாத்தும், சிலவற்றை அதன் அருகிலுள்ள பள்ளிகளிலும் சேகரித்து வைத்தும் உள்ளூர் அளவிலான காட்சியகங்கள் ஏற்படுத்தி பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல்படிமங்கள் கிடைக்கப்பட்டுள்ள பகுதிகளை தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று சமுக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த் டைனோசர் முட்டைகள் மாமிச கார்னோட்டாரஸ் (Carnotaurus) மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ சவுரபோட் டைனோசரின் முட்டைகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

டைனோசர் முட்டைகளாக இருந்தால் இது சுமார் 12 கோடி முதல் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தனித்துவமான கார்னோட்டாரஸ் டைனோசர்கள் தென் அமெரிக்க கண்டத்தில் சுற்றித் திரிந்தன, மேலும் சில அசாதாரண உடல் குணங்கள் இருந்தபோதிலும், அவை மிகவும் ஆதிக்கம் செலுத்தும் வேட்டையாடுபவைகளாக இருந்தன.

கார்னோட்டரஸ் வேகம் மற்றும் சுறுசுறுப்பான விலங்கினம், 1.5 டன் வரை எடையும், சுமார் 30 அடி நீளமும் கொண்டது. பெரிய கால் தசைகள் கொண்ட,மிகவும் திறமையான வேட்டையாடும் ஒன்று என கூறப்படுகிறது.
Read More

Friday, 27 September 2019

சென்னையில் உள்ள பாண்டி பஜார் எனும் கடைவீதிக்கு அந்த பெயர் வந்த காரணம் இது தான்! Why Pondy Bazaar Called Pondy Bazaar

September 27, 2019 0

திண்டுக்கல் மாவட்டத்தின், நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி என்னும் ஊரைச் சேர்ந்த W.P.A.சவுந்தரபாண்டியன் என்ற தொழிலதிபரின் பெயரால், பாண்டியன் கடைத் தெரு என்று வழங்கப்பட்டு, இப்போது பாண்டி பஜார் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த சாலை, சென்னையின் முக்கிய அங்காடித் தெருக்களில் ஒன்று.

தியாகராயா சாலை என்று அழைக்கப்படும் இந்தச் சாலையில் இருபுறமும் வளர்ந்திருக்கும் மரங்கள் அக்காலச் சென்னையின் மீதமிருக்கும் பசுமை அடையாளங்கள்.

பாண்டி பஜாரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று, நாயுடு ஹால் நிறுவனம். இதன் உரிமையாளர் எம்.கோவிந்தசாமி நாயுடு. இவர் ஆரம்பத்தில், டெய்லர் கடை நடத்தி வந்தார்.

தொழிலில் வளர்ச்சியடைந்த அவர், பாண்டி பஜாரில் இப்போது நாயுடு ஹால் இருக்கும் இடத்தில்,மகளிர் மட்டும் என்ற கடையைத் தொடங்கினார். இந்தக் கடையில், மகளிர்களுக்குத் தேவையான உள்ளாடைகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த நிறுவனம்தான் பின்னர், 'நாயுடு ஹால்' என்ற பெயர் மாற்றத்தைப் பெற்றது.

பாண்டி பஜாரின் மற்றொரு முக்கிய அடையாளம், ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி. இரண்டாம் உலகப் போரின்போது, கடற்கரை அருகே இருந்த உயர் நீதிமன்றக் கட்டடத்தின்மீது குண்டு வீசலாம் என்று அச்சம் இருந்தது (ஜெர்மனியின் எம்டன் கப்பல் குண்டு வீசியது). இதனால், உயர் நீதிமன்றம் தற்காலிகமாக இப் பள்ளியில் இயங்கியது.

பாண்டி பஜாரின் பழைய அடையாளங்களாக இருந்தவற்றில், தமிழகத்தின் முதல் கனவுக்கன்னியாக விளங்கிய டி.ஆர். ராஜகுமாரி அவர்களின், ராஜகுமாரி திரையரங்குகமும் ஒன்று. இன்று அத்திரையரங்கம் வணிக வளாகமாக மாறிவிட்டது. இது, ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் இருந்தது. அந்தக் காலத்தில், ஆங்கிலத் திரைப்படங்கள் வெளியிடும் திரையரங்கமாக ராஜகுமாரி இருந்தது.


மற்றொரு திரையரங்கம், தமிழகத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த நகைச்சுவை நடிகர் திரு நாகேஷ் அவர்களின், நாகேஷ் தியேட்டரும் ஒன்று. இத் திரையரங்கம் தற்போது திருமண மண்டபமாக மாறிவிட்டது.

மிக மிக முக்கியமான அடையாளங்கள் இப்பகுதியில் இயங்கி வரும் (தி.நகரில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட) பதிப்பகங்கள்தான். பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை என தியாகராய நகர் உட்புறச் சாலைகள் பலவற்றில் இந்தப் பதிப்பகங்கள் செயல்படுகின்றன. பாண்டி பஜாருக்கு அருகில் உள்ள தெருக்களில் மட்டும் பத்து பதிப்பகங்களுக்கு மேல் உள்ளன.

Read More