HybridAnalyzer Tamil: tamil facts

Hot

Showing posts with label tamil facts. Show all posts
Showing posts with label tamil facts. Show all posts

Wednesday, 9 December 2020

கட்டை விரல் நீளம் மட்டுமே வளரும் குட்டி குரங்குகள்.!

December 09, 2020 1

ங்கிலாந்தில் உள்ள செஸ்டர் (Chester) உயிரியில் பூங்காவில் உலகத்திலேயே சிறிய வகை குரங்கான மார்மோசெட் எனப்படும் அரிய வகை குக்குரங்கினங்கள் உள்ளன. இந்த உயிரியல் பூங்காவில் சோய் மற்றும் பால்டிரிக் என்ற குரங்குகளுக்கு கடந்த செப்டம்பர் 6 ம் தேதி இரட்டையர்களாக இரண்டு குரங்கு குட்டிகள் பிறந்தன. இந்த குக்குரங்குகள் இப்போது வெறும் 5 சென்டி மீட்டர் நீளமே உள்ளன. அதன் எடை  வெறும் 10 கிராம்  மட்டுமே இருக்கிறது. இந்த அழகு குரங்கு குட்டிகள் இப்போது பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.


 குக்குரங்கு என்பது உலகிலேயே மிகவும் குட்டியான குள்ளக்குரங்காகும். இந்த வகை குக்குரங்குகள் தென்அமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில் வாழக்கூ டியவை. மிகவும் சிறிய உருவுடன் காணப்படும், இந்த குரங்குகளின் வாலை விட்டுவிட்டுப் பார்த்தால் உடல் நீளம் 14 முதல் 16 செமீ மட்டுமே இருக்கும். வளர்ந்த குரங்குகளின் மொத்த எடையே 100 கிராம் வரைதான் இருக்கும்.

பிக்மி மார்மோசெட் (Pigmy Marmoset)எனப்படும் இந்த வகை குக்குரங்குகள் மரங்களில் வடியும் பிசினைத்தான் உணவாக உண்ணுகின்றன. இந்த குரங்குங்கள் இயற்கையில் ஏறத்தாழ 11 அல்லது 12 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. ஆனால் உயிரியல் பூங்காக்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றன. அளவில் குட்டியாக இருந்தாலும் இந்த குக்குரங்குகள் மரத்திற்கு மரம், கிளைக்கு கிளை 16 அடி வரை ஒரே தாவாக தாவக்கூடியவை.

இந்த அரிய வகை குக்குரங்குகள் ,பொதுவாக பிறக்கும்போது இரட்டை குரங்குகளாகத்தான் பிறக்குமாம். அது போலவே இந்த செஸ்டர் உயிரியல் பூங்காவில் பிறந்துள்ள இந்த அதிசய இரட்டைப்பிறவி குட்டி குரங்குகள் தாய் குரங்கிடம் உணவு எடுத்துக்கொள்வதும், தாயுடன் கொஞ்சி விளையாடி அதன் முதுகிலேயே சுகமாக பயணிப்பதும் பார்ப்பதற்கே வேடிக்கையாகவும் சுவாரஸியமாகவும் இருக்கின்றது. இந்த அதிசய இரட்டைப்பிறவிகளை பார்க்க உயிரியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. 

இந்த உயிரியல் பூங்காவின் விலங்குகள் காப்பாளர் ஹோலி வெப், ”இந்த குக்குரங்குகள் இப்போது ஒரு எலுமிச்சை பழம் அளவிலேயே உள்ளன. அப்படியானால் இவை பிறக்கும் போது எந்த அளவில் இருந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்” என்று கூறியுள்ளார்.

Read More

Friday, 27 November 2020

இனி கம்பெனிகாரரை திட்டாதீங்க!குழந்தைகளுக்கான சிப்ஸ் பாக்கெட் ஏன் காற்றால் பெருத்திருக்கிறது தெரியுமா?

November 27, 2020 0

உடலுக்கு கேடு என்று நமக்கெல்லாம் தெரிந்திருந்தாலும் நம் குழந்தைகளுக்கு கவர்ச்சிகரமாக தொங்கும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட்களை வாங்கிக் கொடுப்பதை நாமும் நிறுத்துவதாக இல்லை. அதற்கு பதிலாக கடலை மிட்டாய், எள்ளு உருண்டை ஆகியவற்றை வாங்கிக்கொடுத்தால் நல்லது. ஆனாலும் நாம் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட்களைக் கொடுக்கிறோம்.

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் இந்த பாக்கெட்டில் நான்கே நான்கு சிப்ஸை வைத்துக்கொண்டு காற்றை மட்டுமே நிரப்பி பலூன் போல் ஊதிவைத்திருப்பதையும் பார்க்கிறோம். அதைப் பார்ப்பவர்கள் இதை நினைத்து திட்டுவதையும் கேட்கிறோம். அதிலும் முகமே தெரியாத அந்த கம்பெனிக்காரனை திட்டுவதை நாம் ஒவ்வொருமுறையும் தொடர்கிறோம். ஆனால் அப்படி ஏன் வைக்கப்பட்டுள்ளது தெரியுமா?

நாம் பாக்கெட்டைத் திறந்ததும் புஷ் என காற்று போகிறதே…ஏன் சிப்ஸில் காற்று அடைக்கிறார்கள் தெரியுமா? ‘சிப்ஸ் பொதுவாகவே நொருங்கும் தன்மைக் கொண்டது. பாக்கெட்டில் காற்றை நிரப்பாமல் பேக் செய்தால் அது நொருங்கிவிடும். இதே காற்று நிரப்பப்பட்டால் ஒன்றின் மீது ஒன்று விழுந்தாலும் பெரொய அளவில் அழுத்தம் வராது. சிப்ஸ்ம் தயாரிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.

தேபோல் வெறும் சிப்ஸை அப்படியே பேக் செய்தால் பாக்கெட்டுக்குள் இருக்கும் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து விரைவில் நாசமாகிவிடும். இதனால் பாக்கெட்டில் நைட்ரஜன் வாயுவை நிரப்புவார்கள். இதனால் சிப்ஸ் சீக்கிரம் கெடாது. நைட்ரஜன் வாயுவை நிரப்புவதால் சிப்ஸ் கெட்டுப்போகாது என்பது தெரியாமல் வெறுமனே காற்றை நிரப்பி காசு வாங்குவதாக நாம் எத்தனை முறை திட்டியிருப்போம். ஆக, இனி அப்படி திட்டாதீங்க!

Read More