HybridAnalyzer Tamil: stories

Hot

Showing posts with label stories. Show all posts
Showing posts with label stories. Show all posts

Tuesday, 12 November 2019

தட்டச்சு இயந்திரத்தை டகடகவென அடிக்கும் ஆவிகள்! அமெரிக்காவின் மர்மமான நூலகம் | Ghost Library in America

November 12, 2019 1

அமெரிக்காவின் வயோமிங் மாநிலத்தில் உள்ள கிரீன் ரிவர் நகர நூலகம் அமானுஷ்யமான நிகழ்வுகள் மிகவும் பெயர் பெற்றது. நூலகத்தில் நடக்கக்கூடிய மர்மமான நிகழ்வுகளை பதிவு செய்வதற்காக பேய் பதிவேடு என்ற ஒரு தனி கையேட்டையே வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். கடந்த 1998 முதல் இங்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்களை அந்தப் பதிவேட்டில் பதிவு செய்து வருகிறார்கள்.

1980-ஆம் ஆண்டு இந்த நூலகம் திறக்கப்பட்டது போது அதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால், 1860 காலத்தைச் சேர்ந்த ஒரு கல்லறை பகுதியில் நூலகம் கட்டப்பட்டது தான் இந்த மர்ம நிகழ்வுக்கு காரணம் என்று கூறுகிறார்கள். நூலக கட்டிடத்தில் இரவில் படபடவென்று அடித்துக் கொண்டு ஒரு ஓசை ஓடுவதாக அங்குள்ள காவலர்கள் கூறுகின்றனர். அங்குள்ள கலைப்பிரிவில் பகல் நேரத்தில் ஒளிப் புள்ளிகள் மிதப்பதை கண்டதாக சிலர் சொல்கிறார்கள்.

ஒரு சமயம் நூலக ஊழியை ஒருவர் தனது கணினியில் பணிபுரிந்து கொண்டிருந்தார் அப்போது அவர் அனிச்சையாக சில நொடிகள் வேறு பக்கம் நோக்கம் விட்டு மீண்டும் தனது கணினி திரையை பார்த்தபோது அதில் அந்தப் பெண்ணின் பெயர் பெரிய எழுத்துக்களில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இத்தனைக்கும் அப்படி பெயரை தட்டச்சு செய்வதற்கு அவர் கணினியில் அப்போது வசதி கிடையாது.

நூலகத்துக்கு கணினியில் வரும் முன் அங்கு மின் தட்டச்சு எந்திரங்கள் தான் பயன்பாட்டில் இருந்துள்ளது. சில சமயங்களில் தகதகவென்று அவை தானாக அடிக்க தொடங்குமாம். பெரும்பாலும் தட்டச்சு இயந்திரத்தில் எந்த பேப்பரும் இல்லாதபோதுதான் இப்படி தானாக அடிப்பது நடக்கிறது. எனவே ஆவிகள் எதுவும் செய்தியை சொல்லவில்லை. பின் அவை என்ன தட்டச்சு செய்தன என தெரியவில்லை. தட்டச்சு இயந்திரத்தில் தாளை சொருகிவிட்டு சில ஊழியர்கள் பொறுமையாக காத்திருந்து பார்த்தார்கள், அப்போது தட்டச்சு இயந்திரம் தானாக அடிக்கவில்லை. ஒருவேளை ஆவிகளுக்கு மூடு இல்லை போல

Read More

Tuesday, 24 September 2019

கணவன் மனைவிக்கு இடையே இந்த மாதிரியான புரிதல் கட்டாயம் இருக்க வேண்டும்?

September 24, 2019 0

மூன்று முறை டெல்லா அதை எண்ணினார். ஒரு டாலர் மற்றும் எண்பத்தேழு காசுகள். அடுத்த நாள் கிறிஸ்துமஸ். உட்கார்ந்து அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. எனவே டெல்லா அழுதார்.

நாளை கிறிஸ்துமஸ் தினமாக இருக்கும், மேலும் தனது கணவர் ஜிம்மிற்கு பரிசு வாங்க ஒரு டாலர் மற்றும் எண்பத்தேழு காசுகள் மட்டுமே இருந்தன. இந்த முடிவின் மூலம், தன்னால் முடிந்த ஒவ்வொரு பைசாவையும் அவள் பல மாதங்களாக சேமித்து வந்தாள்.


ஜிம் வாரத்திற்கு இருபது டாலர்களை சம்பாதித்தார், அது வெகுதூரம் செல்லவில்லை. அவள் எதிர்பார்த்ததை விட செலவுகள் அதிகமாக இருந்தன. அவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். பல மகிழ்ச்சியான மணிநேரம் அவள் அவனுக்கு நல்ல ஒன்றை வாங்க திட்டமிட்டிருந்தாள். ஜிம் மரியாதைக்கு தகுதியானவர்.

அறையின் ஜன்னல்களுக்கு இடையே ஒரு உயரமான கண்ணாடி இருந்தது. திடீரென்று டெல்லா ஜன்னலிலிருந்து திரும்பி கண்ணாடியின் முன் நின்று தன்னைப் பார்த்தாள். அவள் கண்கள் பிரகாசித்தன. விரைவாக அவள் தலைமுடியை கீழே இழுத்து அதன் முழு நீளத்திற்கு விழ விட்டாள் . கூந்தல் தரையை தழுவியது. டெல்லா தனது தலைமுடியை உலர ஜன்னலுக்கு வெளியே தொங்கவிட்டிருப்பார்.
ஜிம்மின் தலைமுறை சொத்தெல்லாம் ஒன்றே ஒன்று தான் அவன் தாத்தாவையும் அப்பாவையும் கடந்து அவன் கைக்கு வந்த அந்த செயின் இல்லா கைக் கடிகாரம். டெல்லாவிடம் இருந்ததோ அந்த கூந்தல் மட்டுமே.


கடை வீதிக்கு ஓடி சென்றாள்.

"என் தலைமுடியை வாங்குவீர்களா?" டெல்லா கேட்டார். "நான் முடி வாங்குகிறேன்," மேடம் கூறினார். "உங்கள் தொப்பியைக் கழற்றிவிட்டு, அதைப் பார்ப்போம்?." தலைமுடியின் அழகான பழுப்பு நீர்வீழ்ச்சி கீழே வந்தது.

"இருபது டாலர்கள்" மேடம்.

"இதை விரைவாக எனக்குக் கொடுங்கள்" என்றார் டெல்லா.
அடுத்த இரண்டு மணிநேரம் அவளுக்கு இறக்கைகள் இருப்பது போல சென்றது. ஜிம்மிற்கு ஒரு பரிசைத் தேர்வு செய்ய டெல்லா எல்லா கடைகளிலும் பார்த்தார்.

அவள் கடைசியாக அதைக் கண்டுபிடித்தாள். இது நிச்சயமாக ஜிம்மிற்காக செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சங்கிலி. ஜிம்மின் தங்க கடிகாரத்திற்கு இது சரியானது. அவள் அதைப் பார்த்தவுடனேயே அது அவனுக்காக இருக்க வேண்டும் என்று அவள் அறிந்தாள். அது அவரைப் போல இருந்தது. அமைதியான மற்றும் மிகுந்த மதிப்புடன். கடைக்காரருக்கு இருபத்தொன்று டாலர்களைக் கொடுத்த அவள் எஞ்சியிருந்த எண்பத்தேழு காசுகளுடன் வீட்டிற்கு விரைந்தாள்.

ஜிம் ஒருபோதும் தாமதமாக வேலை முடிந்து வீட்டிற்கு வரவில்லை. டெல்லா கையில் வெள்ளி சங்கிலியைப் பிடித்து கதவின் அருகே அமர்ந்தாள். அவள் அவன் அடியைக் கேட்டாள், அவள் ஒரு நிமிடம் வெண்மையாக மாறினாள். அவளுக்கு ஒரு வழி இருந்தது, இப்போது அவள் கிசுகிசுத்தாள்: "தயவுசெய்து கடவுளே, நான் இன்னும் அழகாக இருக்கிறேன் என்று அவனை சிந்திக்க வைக்கவும்."
கதவு திறந்து ஜிம் உள்ளே நுழைந்தார். அவர் மெல்லியதாகவும் மிகவும் தீவிரமாகவும் இருந்தார்.


ஏழை மனிதன், அவனுக்கு இருபத்தி இரண்டு வயதுதான், அவன் ஒரு மனைவியைப் பராமரிக்க வேண்டியிருந்தது. பறவை வாசனை வீசும் நாய் போல அசையாமல் ஜிம் கதவுக்குள் நின்றார். அவரது கண்கள் டெல்லா மீது சென்றது. அவன் வெறுமனே அவளைப் பார்த்தான். கோட்டிலிருந்து ஒரு பையை எடுத்து அழுதுகொண்டே தூக்கி எறிந்தான். விளிம்பில் நகைகளுடன் ஒரு சீப்பு இருந்தது. டெல்லாவிற்கு கிறிஸ்துமஸ் பரிசளிக்க ஜிம் தன் கை கடிகாரத்தை விற்று வாங்கியிருந்தான்.
ஆனால், அவளிடமோ இப்பொழுது அதை பயன்படுத்திக்க கொள்ள கூந்தல் இல்லை. அவளின் அந்த செயினை கைக் கடிகாரத்தில் மாட்ட அவனிடம் இப்பொழுது கைக் கடிகாரம் இல்லை.
ஆயினும் அதை எடுத்துக்கொண்டே கூறினாள் "என் தலைமுடி மிக வேகமாக வளர்கிறது, ஜிம்!" என்று.

கேள்வி : கணவன் மனைவிக்கு இடையே எந்த மாதிரியான புரிதல் கட்டாயம் இருக்க வேண்டும்?

பதில் : ஜிம் டெல்லா போன்று.

வாசித்தமைக்கு நன்றி

The Gift of Magi என்னும் சிறுகதை தொகுப்பிலிருந்து

Read More

Friday, 9 March 2018

Frog Story In Tamil

March 09, 2018 0
ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
*
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
*
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
*

தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
*
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
*
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
*
எது அந்த தவளையை கொன்றது...?
*
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
*
ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......
*
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
*
ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*
மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
*
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"
Read More

Saturday, 17 February 2018

புலியின் முடி - நீதிக்கதை

February 17, 2018 0
ஒரு அபூர்வமான முனிவரிடம் ஒரு பெண் வந்து தன கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள்.
முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.
மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து வந்து விட்டாள். மறுநாள் சென்றாள் புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைவாக இருந்தது. ஆனாலும் திரும்பி விட்டாள்.
அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்து விட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.
புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள்.
முனிவர் கூறினார் ''இனி உனக்கு மூலிகை தேவையில்லை."
நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய்.
அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா, என்ன?''
முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது.அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்...!


நீதி: நம் பயங்களும் சந்தேகங்களும் மற்றவரின் அன்பையும் நட்பையும் அடையத் தடையாக இருக்கக்கூடாது.
tamil stories for childrens and tamil needhi kadhaigal
Read More