HybridAnalyzer Tamil: World

Hot

Showing posts with label World. Show all posts
Showing posts with label World. Show all posts

Saturday, 28 September 2019

இந்தியாவில் மக்கள் செல்ல தடை செய்யப்பட்ட ஆதி மனிதர்கள் வாழும் மர்மமான தீவு | Mysterious North Sentinel Island

September 28, 2019 0

இந்தியாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளை சுற்றி, பல சிறு சிறு, தீவுகள் உள்ளன. அதில் சில தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டும் சில தீவுகள் கண்டுபிடிக்கப்படாமலும் உள்ளன. அப்படிப்பட்ட, தீவுகளில் மக்கள் செல்ல தடை விதிக்கப் பட்ட ஒரு தீவைப் பற்றி தான் இந்த தொகுப்பில் எழுதியுள்ளோம்.

அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேயர் நகரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மர்ம தீவு தான் நார்த் சென்டினல் ஐலேண்ட். இந்த தீவில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காட்டுவாசி மக்கள் இனம் இன்றளவும் வெளியுலக தொடர்பு இல்லாமல் கற்காலத்திலேயே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உலகிலேயே இன்றளவும் கற்கால மக்களாக வாழ்பவர்கள் இந்த தீவில் மட்டும்தான் உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு இருக்கக்கூடிய மக்கள் இன்றளவும் வாழ்வதற்கான அடிப்படை தேவைகளாக விவசாயம், நெருப்பு போன்றவற்றை கூட கண்டுபிடிக்காமல் கற்கால மக்கள் போல வேட்டையாடியும், மீன் பிடித்தும் அன்றாட தேவைக்கு ஏற்ப உணவு சேகரித்து வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

இந்தத் தீவில் இன்றளவும் நெருப்பு கூட கண்டுபிடிக்காமல் வாழ்கிறார்கள் என கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு. மிகச்சிறிய பரப்பளவு கொண்ட இந்த தீவில் நெருப்பு எறிந்தால் கண்டிப்பாக புகைமூட்டம் தெரியும். ஆனால், இவ்வளவு காலத்தில் ஒரு நாளும் அந்தத் தீவில் புகை மூட்டம் ஏற்பட்டதற்க்கான அறிகுறிகளே இல்லை.

இந்த தீவின் அளவைப் பற்றி கூற வேண்டுமானால் நீளம் 8 கிலோ மீட்டர்கள் அகலம் 7 கிலோமீட்டர் கொண்டு தோராயமாக 60 சதுர கிலோ மீட்டர் மட்டுமே பரப்பளவு கொண்டதாக உள்ளது.

அத்துடன் இந்த தீவிற்கு மிகப்பெரிய வரலாறு ஒன்றும் உள்ளது. சோழர்கள் காலத்தில் இருந்து ஆரம்பித்தோம் என்றால், முதலாம் இராஜேந்திரசோழன் இந்தோனேசியாவை கைப்பற்ற அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை முதலில் கைப்பற்றி அந்த இடத்தை கடற்படை தளமாக பயன்படுத்தியுள்ளான். அப்போது சோழர்கள் இந்த மொத்த தீவு கூட்டத்தையும் திண்ம தீவு என அழைத்துள்ளார்கள். மேலும், அந்த காலகட்டத்தில் இந்த நார்த் சென்டினல் தீவை பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அதோடு இந்தத் தீவும் மியான்மர் எனப்படும் அன்றைய பர்மாவிற்கு சொந்தமாக இருந்தது. அப்படியே காலங்கள் கடக்க பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் வரை யாரும் இந்த தீவை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.

முதன்முதலில் 1771-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கப்பல் அந்த வழியாகச் செல்லும் போது இப்படி ஒரு தீவு இருப்பதை அந்த கப்பலில் பயணம் செய்த பயணிகள் கூறிய அடையாளங்கள் மூலம் கண்டுபிடித்தார்கள். அதற்குப்பின் 1867-ஆம் ஆண்டு இந்திய வியாபார கப்பல் ஒன்று விபத்துக்கு உள்ளாகி சில மாலுமிகள் இந்த தீவில் கரை ஒதுங்கிய உள்ளார்கள். இந்த கரையொதுங்கிய மாலுமிகள் தீவினுள் வரக்கூடாது என அந்த தீவில் இருந்த கற்கால மக்கள் கற்களாலும் அம்புகளும் தாக்கியுள்ளார்கள்.

இந்த நிகழ்வுகளை அறிந்த போர்ட்மேன் எனும் பிரிட்டிஷ் கடற்படை அதிகாரி அந்த மக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய தீவினுள் சென்று வெறும் காடாக இருந்த அந்த இடத்தில் இருந்து ஆறு நபர்களை பிடித்து அந்தமானிற்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், வெளியுலக அனுபவமும் சந்திப்பும் இல்லாத அவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி ஆறு நபர்களில் இருவர் இறந்து போனார்கள். எனவே, மீதம் இருந்த நான்கு சிறுவர்களையும் காப்பாற்றும் பொருட்டு சென்டினல் தீவிலேயே விட்டு விட்டார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு 1970 வரை யாரும் அந்த தீவை பற்றி கண்டுகொள்ளவில்லை. அதற்கு பிறகு சில தொலைக்காட்சி ஆய்வாளர்கள் இந்தத் தீவைப் பற்றி பேச ஆரம்பித்துள்ளார்கள்.

1977-ம் ஆண்டு Mv-Rusly  எனும் இரும்பு ஏற்றி செல்லும் சரக்கு கப்பல் பவளப் பாறைகளில் மோதி இந்த தீவுப்பகுதியில் சரிந்தது. அதன்பின் 1981-ம் ஆண்டு Mv-Prime Rose  என்ற கப்பல் அந்த தீவின் கரை பகுதியில் விபத்துக்குள்ளாகி மாட்டிக்கொண்டது. இன்னமும் இந்த கப்பலை கூகுள் மேப்பில் நம்மால் பார்க்க முடியும். இந்த கப்பலில் இருந்து உயிர் பிழைத்து வந்தவர்கள் கூறிய தகவல்கள் என்னவென்றால், முன்னதாகவே அங்கு உடைந்த கப்பலில் உள்ள இரும்புகளை பயன்படுத்தி ஈட்டி, அம்பு மற்றும் ஒரு சிறிய படகையும் அந்த தீவில் உள்ள காட்டுவாசிகள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்கள்.

இதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக அந்த்ரோபொலஜிகள் சர்வே ஆஃப் இந்தியா எனும் மக்கள் மற்றும் கலாச்சாரம் பற்றி ஆராய்ச்சி செய்ய கூடிய அமைப்பு சென்டினல் தீவிற்க்கு சென்றுள்ளது. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை 1997-ஆம் ஆண்டு இந்திய அரசு அந்த தீவை சுற்றி 3 நாட்டிக்கல் மைல் தொலைவிற்கு யாரும் செல்லக்கூடாது என தடை விதித்து விட்டது. அதற்கான சரியான காரணத்தையும் அரசாங்கம் வெளியிடவில்லை.

இதைப் பற்றி சிலர் இங்கு வாழும் மக்கள் வெளியாட்களை உள்ளே அனுமதிக்க விடுவது கிடையாது. மீறி வருபவர்களை கொன்று விடுவார்கள். அதனால், தான் அரசாங்கம் தடை செய்துள்ளது என்றும். மேலும் சிலர், அங்கு உள்ள மக்கள் பழங்கால வாழ்க்கை முறையை வாழக்கூடியவர்கள் அவர்களை இங்கு இருப்பவர்கள் சந்திப்பதால் நோய் தொற்று ஏற்பட்டு ஒரு இனமே அழிய வாய்ப்பு உள்ளது. அதனால்  கூட அரசாங்கம் அந்த தீவிற்கு மக்கள் செல்ல தடை விதித்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால், இந்தியாவிற்குள் இப்படி ஒரு மர்மமான தீவு இருப்பது மிகவும் பிரமிப்பாக உள்ளது மட்டுமில்லாமல் பலருக்கு இதை பற்றி தெரியாது.

சமீபத்தில் கூட அங்கு சென்ற ஒரு அமெரிக்கரை கொன்றுவிட்டதாக ஒரு செய்தியானது உலகம் முழுவதும் பல தொலைக்காட்சி செய்திகளில் வெளியானது. இதற்கு பின்பே இந்த தீவை பற்றி பலருக்கும் தெரிய வந்தது.

இத்தனைக்கும் நார்த் சென்டினல் தீவு மாடர்ன் உலகத்தில் இருந்து வெகு தொலைவில் எல்லாம் கூட இல்லை. ஒரு இண்டர்நேஷனல் ஏர்போர்ட், ஹார்பர், இந்தியாவின் கடற்படை தளம் என அனைத்து வசதிகளும் இருக்கக்கூடிய போர்ட் பிளேயர்-லிருந்து வெறும் 50 கிலோ மீட்டர் தொலைவில் மட்டும் தான் உள்ளது.

Read More