HybridAnalyzer Tamil: Videos

Hot

Showing posts with label Videos. Show all posts
Showing posts with label Videos. Show all posts

Sunday, 13 December 2020

முரண்பாடாக பிறந்த 10 பிராணிகள்! 10 Most Unusual Mutant Animals!

December 13, 2020 0


பொதுவாக ஒரே இனத்தைச் சேர்ந்த எல்லா விலங்குகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தால் அது கண்டிப்பாக இல்லை. ஒவ்வொரு விலங்கும் மாறுபட்ட தோற்றத்தில் தான் இருக்கும். அந்த வித்தியாசம் அந்த விலங்குகளுடன் நெருங்கி பழகும் போது தான் தெரியும். ஆனால், சில விலங்குகள் பிறக்கும்போதே மிகவும் வித்தியாசமான தோற்றம் பண்புகளோடு பிறக்கும் அதனால் அவற்றைப் பார்த்த உடனே அது வித்தியாசமாக இருக்கிறது என கண்டுபிடிக்சில விலங்குகள் பிறக்கும்போதே மிகவும் வித்தியாசமான தோற்றம் பண்புகளோடு பிறக்கும் அதனால் அவற்றைப் பார்த்த உடனே அது வித்தியாசமாக இருக்கிறது என கண்டுபிடிக்க முடியும். அப்படி வித்தியாசமாக பிறந்த வினோதமான பிராணிகளைப் பற்றி தான் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளப் போகிறோம். 

Read More

Friday, 11 December 2020

விலங்கு வயிற்றில் கிடைத்த 9 வினோத பொருட்கள்!

December 11, 2020 0
                  

பொதுவாக அனைத்து விலங்குகளுக்கும் தனக்கு என்ன உணவு தேவை என்பது நன்றாக தெரியும். எனவே அவை தனக்கான உணவை மட்டும் தான் சாப்பிடும். ஆனால், தவறு செய்யும் பழக்கம் மனிதர்கள் போலவே விலங்குகளுக்கும் உண்டு. எனவே, சில விலங்குகள் சில நேரங்களில் தவறான பொருட்களை தனக்கான உணவு என நினைத்து சாப்பிட்டு பிரச்சனைகளில் சிக்கின்றன. அப்படி பிரச்சனையில் சிக்கிய விலங்குகளின் வயிற்றில் இருந்து கிடைத்த மிகவும் வித்தியாசமான பொருட்களை பற்றி தான் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

Read More

Sunday, 6 December 2020

காண்பவர்களை மிரள வைக்கும் 10 வினோதமான அரிய வகை சிலந்திகள்

December 06, 2020 0

பொதுவாக சிலந்திகள் நிறைய பேரை பார்க்கும்போதே பயமுறுத்தும் ஒரு சின்ன உயிரினம். அதில் சில வகை சிலந்தி பயமுறுத்துவது மட்டுமில்லாமல் தனது விஷத்தால் கொலையும் செய்யும். ஆனால் மொத்தமாக உள்ள 43 ஆயிரத்துக்கும் அதிகமான சிலந்தி இனங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக தான் இருக்கும்.சில சிலந்தி சாதாரணமாகவும், இன்னும் சில அரிய இனமாகவும், வேறு சில சிலந்திகளை பற்றி கேட்கும்போது மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம். அப்படி ஆச்சரியத்தக்க பண்போடு இருக்கும் சில அரிய வகை சிலந்தி இனங்களைப் பற்றி தான் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.


Read More

Wednesday, 2 October 2019

உலக அதிசயங்கள் ஏன் 7 மட்டும் உள்ளது?

October 02, 2019 0

நமது இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் ஏன் ஏழே ஏழு உலக அதிசயங்களை மட்டும் குறிப்பிட்டு கூறுகிறார்கள், ஏன் 8 9 10 என உலக அதிசயங்களை நிர்ணயிக்கலாமே. அப்படி என்றாவது இதைப்பற்றி நீங்கள் யோசித்தது உண்டா அப்படி யோசித்ததன் விளைவுதான் இந்த தொகுப்பு.

வலைத்தளம் முழுவதும் தேடி நான் தெரிந்துகொண்ட விஷயங்களை நீங்களும் தெரிந்து கொள்ளவே இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏழு அதிசயங்களை மட்டும் குறிப்பிட்டு உள்ளார்கள் என்றால் ஏழு என்பது அனைத்து மதம் மற்றும் கலாச்சாரங்களின் ஒரு சிறப்பு மிகுந்த எண் ஆகும். மனிதனுடைய வாழ்க்கையில் மட்டும் அல்லாமல் இயற்கையாகவே எல்லா இடங்களிலும் குறிப்பிட்டு கூறக்கூடிய ஒரு எண் தான் இந்த ஏழு.

எடுத்துக்காட்டாக, சில உதாரணங்களை கூற வேண்டுமானால், நீங்கள் உங்கள் தாத்தா பாட்டியிடம் கதை கேட்டீர்கள் என்றால் அவர்கள் ஆரம்பிக்கும் போது ஒரு ஊரில் என ஆரம்பித்து ஏழு கடல் ஏழு மலை தாண்டி என்ற வார்த்தைகள் கண்டிப்பாக இடம்பெறும் படியான கதைகளை நிறையவே கூறியிருப்பார்கள். வானவில் கூட VIBGYOR என ஏழு நிறங்கள் கலந்த கலவையாக தான் புறப்படுகிறது மற்றும் இந்த ஏழு நிறங்கலாள் தான் வெளிச்சம் கிடைப்பதாகவும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். மனிதன் தலைப்பகுதியில் கூட அதாவது கழுத்திற்கு மேல் ஒரு வாய் இரண்டு காது இரண்டு கண் மற்றும் மூக்கு துவாரம் என ஏழு துளைகள் தான் உள்ளது. பழங்கால இஸ்லாமிய இதிகாசங்களில் கூட 14 லோகங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அதை நேரடியாக 14 எனக் கூறாமல் ஈரேழு பதினாலு அதாவது ஏழு சொர்க்கம் ஏழு நரகம் என குறிப்பிட்டு இருப்பார்கள். எகிப்திய மக்கள் கூட பாரம்பரியமாக 7 எனும் என்னை சாகா வரத்தை குறிப்பிடக்கூடிய குறியீடாகத்தான் பார்க்கிறார்கள். ஜப்பானியர்களின் புராணக் கதைகளில் கூட 7 அதிர்ஷ்ட கடவுள்கள் இருப்பார்கள். இந்து மதத்தில் மனிதனுக்கு ஏழு பிறவி இருக்கு என சொல்லுவார்கள். அது மட்டும் இல்லாமல் உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பார்கள் என பலர் கூறி நாம் கேட்டிருப்போம். யோகாசனத்தில் கூட மனித உடம்பில் ஏழு சக்கரங்கள் இருப்பதாகவும் அது சீராக செயல்பட்டால் உடல் ஆரோக்கியம் மிகுந்ததாக இருக்கும் எனவும் கூறுகிறார்கள்.

இவை அனைத்தும் மிகச் சிறிய எடுத்துக்காட்டுகள் தான். இது போல இன்னும் ஏழு என்ற எண்ணை வைத்து பல நம்பிக்கைகளும் நிகழ்வுகளும் உள்ளன. ஏன் உள்ளன என்பதற்கான ஒரு சிறிய காரணத்தை தெரிந்து கொண்டோம். அடுத்ததாக தற்போது உள்ள ஏழு உலக அதிசயங்கள் எவை எவை என்பதை காணலாம்.

1. சீனப் பெருஞ்சுவர் (The Great Wall of China)

கிமு 200-களில் அந்நியர்களின் ஊடுருவல் மற்றும் படையெடுப்பைத் தடுப்பதற்காகவே சுமார் 21196KM நிலத்தில் கட்டப்பட்ட ஒரு பெருஞ்சுவர் தான் சீனப்பெருஞ்சுவர். ஆரம்ப காலத்தில் சிறு சிறு நாடாக பல சிற்றரசர்களின் கையில் இருந்த இடங்களை ஒன்றாக இணைத்து தற்போது உள்ள மிகப்பெரிய நாடான சீனாவை உருவாக்கியது ஃகின் ஸீ ஃகாங்க் என்ற பேரரசர் தான். ஆனால் இந்த ஒருங்கிணைப்புக்கு பிறகும் மற்ற சிறிய நாடுகளின் படையெடுப்பு இருந்துகொண்டே இருந்தது. தங்கள் எல்லையை பாதுகாத்து கொள்ள எண்ணி தான் அந்த அரசர் இவ்வளவு நீளமான சுவரை எழுப்பி உள்ளார்.

இதை வெறும் பாதுகாப்பிற்கு மட்டும் பயன்படுத்தாமல் போக்குவரத்து பாதையாகவும் பயன்படுத்தி அதில் செய்பவர்களிடமிருந்து வியாபார பொருட்களை எடுத்துச் சென்றால், அதற்கு சுங்க வரியும் வசூலிக்கப்பட்டது. ஆனால் இந்த பிரமாண்டமான சீனபெருஞ்சுவர் தற்போது அழியும் நிலையில் உள்ளது. தற்சமயம் இடையே உடையாமல் ஒரே நீளமாக உள்ள அதன் அதிகபட்ச நீளம் வெறும் 8250 கிலோ மீட்டர்கள் தான். தற்போது அங்குள்ள மக்கள் அந்த சுவரில் உள்ள வலுவான கற்களை சொந்த பயன்பாட்டிற்காக எடுத்துச் செல்வதாக பல புகார்கள் குவிந்துள்ளன.

2. ஜோர்டான் நாட்டின் பெட்ரா நகரம் (Jordon's Petra)

இந்த நகரம் முழுவதும் ஒரே ஒரு பாறையை குடைந்து செதுக்கப்பட்ட நகரம். கிமு நான்காம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது ஒரு பாலைவன நாடாக இருப்பதால் இந்த இடத்தை ஒருமுறை கிரேக்கர்கள் படையெடுத்தபோது அங்கு ஆட்சி செய்தவர்களிடம் வீழ்ச்சி அடைந்தார்கள். பிறகு கிபி 106-ஆம் ஆண்டு அந்த இடத்தை ரோமானியர்கள் கைப்பற்றினார்கள். அதற்குப் பிறகு இந்த இடத்தை பற்றிய எந்த தகவலும் இல்லாத நிலையில் 1812-ஆம் ஆண்டு ஜான் லுதுவிக் பர்கார்ட் என்ற தொல்பொருள் ஆய்வாளர் தன்னுடைய குழுவுடன் இந்த பெட்ரா நகரத்தை கண்டுபிடித்தார்.

1985-இல் இந்த இடத்தை யுனஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்தது. அங்கு வாழ்ந்த மக்கள் பாறைகளை குடைந்து அதற்குள் கட்டிடங்களை அமைப்பதில் கைதேர்ந்தவர்களாக இருந்துள்ளார்கள் அத்துடன் பாலைவனப் பகுதியாக இருந்ததால் மழை நீர் சேகரிப்பு செய்வதிலும் சிறந்து செயல்பட்டுள்ளார்கள். அதனாலேயே தற்போது இந்த நகரம் உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது.

3. கொலூசியம் (Colosseum)

இத்தாலியில் உள்ள இந்த கட்டிடமானது ஒரே நேரத்தில் 50000 முதல் 80000 ஆயிரம் மக்கள் கூடும் அளவிற்கு மிகப்பெரிய திடல். இதை நாடகம், விழா, விளையாட்டு போன்றவைகள் நடக்கக்கூடிய அரங்கமாக உபயோகித்துள்ளார்கள். அந்த காலத்தில் ரோமானிய மன்னர்களான வெஸ்பேசியன் மற்றும் அவரது மகன் டைட்டஸ் காலத்தில் கிபி 80-ல் இந்த கட்டிடத்தை கட்டியுள்ளார்கள்.

கிட்டத்தட்ட கடந்த 2000 வருடங்களில் பல நிலநடுக்கங்களையும் இயற்கைச் சீற்றங்களையும் இந்த கட்டிடம் சந்தித்துள்ளது. ஆனாலும் இவ்வளவு ஆண்டுகள் கடந்தும் மிகப்பழமையான கட்டிடம் ஆக இருப்பதால் பல சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது. இந்த கட்டிடத்தை பெருமைப்படுத்தும் விதமாக இதன் உருவப்படம் அடங்கிய நாணயங்களை ஐரோப்பியர்கள் வெளியிட்டுள்ளனர்.

4.சிச்சன் இட்ஸா (Chichen Itza)

சிச்சன் இட்ஸா கட்டமைப்புகளை மாயன் பிரமிடுகள் என்றும் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பானது ஒரு நகரமாக இருந்து அங்கு மக்களும் வாழ்ந்து உள்ளார்கள். மாயன் என்று அழைக்கப்பட்ட மக்கள் தான் இதனுள் வாழ்ந்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கூற வேண்டுமென்றால் மாயன் இன மக்கள் அதிக அளவில் வாழ்ந்த இடங்களில் சிச்சன் இட்ஸா தான் மிக முக்கியமான நகரம்.

மெக்சிக்கோவில் உள்ள இந்த கட்டிடமானது அந்நாட்டின் நேஷனல் இன்ஸ்டிடுயூட் ஆஃப் ஆந்த்ரோபாலஜி என்ற அமைப்பால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதன் அடி நிலம் மட்டும் 2010 வரை வேறு ஒரு தனி நபருக்கு சொந்தமானதாக இருந்துள்ளது. 2010-ற்கு பிறகு அரசாங்கமே அந்த நிலத்தை எடுத்துக் கொண்டது. இந்த இடத்தை கிபி 750 லிருந்து 900 ஆண்டு வரை மேலோட்டமாக உருவாக்கி அதன் பின் தான், முழு நகரமாக மாற்றி இருக்கிறார்கள். இதில் மாயன் மற்றும் மெக்ஸிகன் கலாச்சாரங்கள் இரண்டையும் கலந்து கட்டி இருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

5. மச்சு பிச்சு (Machu Picchu)

மலை உச்சியில் அமைந்துள்ள ஒரு பழங்கால நகரம் தான் மச்சு பிச்சு. 1450-ல் தான் இந்த நகரத்தை உருவாக்கி உள்ளார்கள். ஆனால் ஸ்பானிஷ் காரர்களின் படையெடுப்பு காரணமாக, இந்த இடத்தை விட்டு விட்டு சென்று விட்டார்கள் அங்கு வசித்த மக்கள். அதற்கு பின் யாருக்கும் இந்த மலை மேல் இப்படி ஒரு நகரம் இருப்பது தெரியாமல் போனது. ரொம்ப காலத்திற்கு பின் 1911-ஆம் ஆண்டு தான் ஹிராம் பின்காம் எனும் வரலாற்று ஆராய்ச்சியாளர் மச்சு பிச்சுவை தேடி கண்டுபிடித்துள்ளார். 

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் உள்ள இது, கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பல புதுப்பிப்பு பணிகளை மேற்கொண்ட பின் தற்போது ஒரு நல்ல சுற்றுலாத் தளமாக இயங்கி வருகிறது. 1983-ல் யுனஸ்கோ இதை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
எந்திரன் படத்தில் வரும் கிளிமஞ்சரோ எனும் பாடல் இந்த இடத்தில் தான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிட்தக்கது.

6. தாஜ்மஹால் (Taj Mahal)

தாஜ்மஹாலை பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது முழுக்க முழுக்க பளிங்கு கல்லால் 73 மீட்டர் உயரத்திற்கு கட்டப்பட்ட ஒரு பிரம்மாண்ட கட்டிடம் தாஜ்மஹால் என்பது ஒரு அரேபிய வார்த்தை இதற்கு தமிழில் அரண்மனைகளின் கிரீடம் என்பது பொருள். இது உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த பிரமாண்டத்தை உஸ்தாத் அகமது குவாரி என்ற கட்டிடக்கலைஞர் கட்டினார்.

இது 1632-ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1653-ல் கட்டிமுடிக்கப்பட்டது. இதற்காக கட்டுமான செலவானது, அன்றைய கணக்குப்படி மூன்று கோடியே இருபது லட்சம் ஆகும். இந்த மதிப்பானது 2015 ஆம் ஆண்டு கணக்குப்படி 5280 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது. 1983-இல் தான் இது உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

7. கிறிஸ்ட் தீ ரிடமிர் சிலை (Statue of Christ the Redeemer)

பிரேசிலின் பழைய தலைநகரமான ரியோவில் அமைந்துள்ள இயேசுநாதரின் பிரம்மாண்ட சிலை தான் இது. பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த பால் லடெவ்ஸ்கி என்பவரால் திட்டம் மற்றும் வடிவமைப்பு உருவாக்கப்பட்டு உலகின் தலைசிறந்த என்ஜினியர்கள் மூலம் இந்த சிலை வடிவமைக்கப்பட்டது. 

700 மீட்டர் உயரம் உள்ள கொர்க்கவேடோ என்ற மலையில் 30 மீட்டர் உயரத்தில் இது கட்டப்பட்டுள்ளது. இந்த சிலையின் கைகள் இரண்டும் 28 மீட்டர் நீளத்திற்கு விரிந்து காணப்படுகிறது. 1922-ல் கட்ட ஆரம்பித்து 1931-இல் கட்டி முடிக்கப்பட்டும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உள்ள உலக அதிசயங்கள் ஏழும் 2000-ம் ஆண்டில் இருந்து 2007 ஆம் ஆண்டு வரை உலக மக்களிடம் வாக்கு சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே ஏழு உலக அதிசயங்களாக இவற்றை அறிவித்தார்கள். அதனால் 2007-ம் ஆண்டுக்கு முன்பு வரை வேறு சில பிரம்மாண்டமான உலக அதிசயங்கள் இருந்துள்ளன.

Read More