HybridAnalyzer Tamil: Jobs

Hot

Showing posts with label Jobs. Show all posts
Showing posts with label Jobs. Show all posts

Monday, 30 September 2019

படிக்காதவர்களாளும் செய்ய முடிந்த அதிக சம்பளம் கிடைக்கும் 10 வெளிநாட்டு வினோதமான வேளைகள்

September 30, 2019 0

உலகம் முழுவதும் பலவிதமான கடினமான மற்றும் வித்தியாசமான வேலைகளும் அதற்கு ஏற்றார்போல் சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அப்படி வெளிநாடுகளில் மிக எளிமையாக ஆனால், வினோதமாக இருக்கக்கூடிய பத்து வேலைகளை பற்றி தான் இந்தத் தொகுப்பில் எழுதியுள்ளோம்.

10. ஃகால்ப் பால் டைவர் (Golf Ball Diver)

பணக்காரர்களால் அதிகம் விரும்பி விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்று தான் ஃகால்ப். இந்த விளையாட்டு விளையாட கூடிய மைதானமானது சராசரியாக 150 ஏக்கர் பரப்பளவிற்கு இருக்கும். இங்கே அழகிற்காகவும் அந்த இடத்தை பராமரிப்பதற்க்காகவும் மைதானம் முழுவதும் சிறிய சிறிய குளங்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.

ஃகால்ப் விளையாட வருபவர்கள் விளையாடும் போது பந்துக்கள் இந்த குளங்களில் விழுந்துவிடும். அப்படி விழும் பந்துகளை தேடி எடுப்பவர்களை தான் ஃகால்ப் பால் டைவர்கள் என அழைக்கிறார்கள். இவர்களுக்கு சாதாரணமாக வருடத்திற்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் டாலர்கள் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 35 லட்சம் முதல் 75 லட்சங்கள் வரை ஆகும். அங்கு விளையாட வருபவர்கள் பெரும் பணக்காரர்களாக இருப்பதே இதற்கு காரணம்.

9. பெர்சனேல் ஷோப்பெர்ஸ் (Personal Shoppers)

இவர்களுடைய வேலை என்னவென்றால் ஷாப்பிங் செல்பவர்களுடன் சென்று பொருட்கள் வாங்க உதவியாக இருப்பது தான். உதாரணமாக, ஒருவர் உடை வாங்க செல்கிறார் என்றால், அவருக்கு அந்த உடை சரியாக உள்ளதா அவருக்கு அது பொருந்துமாக இருக்குமா போன்ற சிறுசிறு குறிப்புகளை கொடுக்க வேண்டும். குறிப்பாக இவர்கள் அந்த நபருக்கு ஒரு நெருங்கிய நண்பர் போல இருக்க வேண்டும்.

இப்படி உதவியாக இருப்பவர்கள் சம்பளமாக வருடத்திற்கு சுமார் இந்திய மதிப்பில் 35 லட்சம் வரை சம்பாடுதிக்கிரார்கள்.

8. உணவு அலங்கரிப்பவர் (Food Designer)

இவர்கள் விதவிதமான உணவுப் பொருட்களை மிக அழகாக அலங்கரிப்பார்கள். பல பெரிய விசேஷங்களிலும் பிரமாண்டமான ஹோட்டல், பார் போன்றவற்றிலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உணவு பொருட்களை அலங்கரிப்பது தான் இவர்களுக்கு கொடுக்கப்படும் வேலை.

இப்படி உணவு வீணாகாமல் வாடிக்கையாளர்களுக்கு பிடிக்கும் வகையில் அழகுபடுத்துவது ஒரு தனி கலையாகும். அதனாலேயே இவர்களுக்கு ஆண்டுக்கு 38 லட்சத்திற்கும் மேல் சம்பளமாக வழங்கப்படுகிறது.

7. செல்ல பிராணிகள் உணவுகளை சோதிப்பவர்(Pet Food Tester)

பல மேலை நாடுகளில் மனிதர்களை மதிக்கிறார்களோ இல்லையோ ஆனால், தங்கள் செல்லப்பிராணிகளை உயிரினும் மேலாக மதித்து பராமரித்து வருகிறார்கள். சிலர் இறந்த பிறகு தங்கள் சொத்துக்கள் அவர்களது செல்லப்பிராணிகளுக்கு தான் என்று எழுதி வைத்த பல செய்திகளை கூட நாம் அறிந்திருப்போம். அப்படிப்பட்ட வளர்ப்பு விலங்குகளுக்கு சாப்பிடுவதற்கு முன் உணவை சரியாக உள்ளதா என ஆராய்வதற்காக சில மனிதர்கள் வேலைக்காரர்களாக வைக்கப்படுகிறார்கள். அவர்களே செல்லப் பிராணிகளின் உணவு பரிசோதகர்கள். இந்த பணிக்கு ஆண்டுக்கு இந்திய மதிப்பில் சராசரியாக 50 லட்சத்திற்கும் மேல் சம்பளமாக வழங்கப்படுகிறது.

பழங்காலத்தில் அரசர்களும் செல்வந்தர்களும் சாப்பிடுவதற்கு முன் எதிரிகளால் விஷம் வைக்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்தி கொள்வதற்காக முதலில் நாய்,பூனை போன்ற விலங்குகளுக்கு அவர்கள் சாப்பிடும் உணவை வைப்பார்கள். அவற்றிற்கு ஏதும் ஆகவில்லை என உறுதி செய்த பிறகு இவர்கள் சாப்பிடுவார்கள். ஆனால், இந்த காலத்தில் மாறாக விலங்குகள் சாப்பாடு நன்றாக உள்ளதா என அறிந்துகொள்ள மனிதர்களுக்கு கொடுத்து சோதிக்கிறார்கள். இது கொஞ்சம் பிரம்மிப்பாக தான் உள்ளது.

6. மேக்ஸ் திரை துடைக்கும் வேலை (Imax Screen Cleaner)

நவீன காலத்தில் திரை அரங்குகளில் உள்ள பிரம்மாண்டமான புதிய தொழில்நுட்பத்துடன் உள்ள வீடியோ ஸ்கிரீன்களே மேக்ஸ் திரை என அழைக்கப்படுகிறது. இது அறிமுகப்படுத்தப்பட்டது கூட 2008-ஆம் ஆண்டில் தான். மிக நுண்ணிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு இருப்பதால் காற்றில் உள்ள தூசிகள் மிக எளிமையாக இதில் ஒட்டிக்கொள்ளும். 3டி மற்றும் 4டி தரத்தில் வீடியோக்கள் காட்டப்படுவதால் தூசு படிந்திருந்தால் மிக சுலபமாக தெரிந்துவிடும். அதனால், இதை அடிக்கடி சுத்தப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

சுமார் 16 மீட்டர் உயரமும் 22 மீட்டர் அகலமும் உள்ள இந்த ஸ்கிரீனை சுத்தம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சில சமயங்களில் இதை சுத்தம் செய்ய எட்டு மணி நேரம் கூட ஆகும். அதனாலேயே இந்த வேலை செய்பவர்களுக்கு வருடத்திற்கு இந்திய மதிப்பில் 28 லட்சத்திற்கும் மேல் ஊதியமாக வழங்கப்படுகிறது.

5. எம்பால்மர் (Embalmer)

சில சமயங்களில் இறந்து போனவர்களின் உடலை சில நாட்கள் பாதுகாத்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அப்படிப்பட்ட சமயங்களில் எம்பால்மர் என்ற பெயரில் அழைக்கப்படும் இவர்கள் தான் அந்த உடலை சரியானபடி பதப்படுத்தி வைக்கக்கூடிய பல செயல்பாடுகளை மேற்கொள்வார்கள்.

இவர்களைத்தான் எம்பால்மர் என கூறுகிறார்கள். இவர்களும் ஆண்டிற்கு இந்திய மதிப்பில் சுமார் 45 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள்.

4.மிஷ்டரி சாஃப்பர் (Mystery Shopper)

பெரிய கடைகள்,ஹோட்டல் மற்றும் வணிக ஸ்தலங்களில் அந்த கடையின் உரிமையாளர் தன் பணியாளர்கள் சரியாக வேலை செய்கிறார்களா என அறிந்துகொள்ள வாடிக்கையாளர்கள் போலவே போலியான சிலரை அனுப்பி அவர்கள் மூலம் தனது பணியாளர் எப்படி வேலை செய்கிறார் என்பதை பற்றி அறிந்து கொள்வார். இதற்காக அனுப்பப்படும் நபர்களை தான் மிஸ்டரி ஷாப்பர் என கூறுவார்கள்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு பெரிய ஹோட்டல் உரிமையாளர் என வைத்துக் கொண்டால் அங்கு வேலைசெய்யும் சர்வர்கள் ஹோட்டலிற்குக்கு வரக்கூடிய கஸ்டமர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என அறிய தாங்களாகவே ஒருவரை ஏற்பாடு செய்து அவர்களை சாதாரணமான கஸ்டமர்கள் போல நடந்து கொள்ள சொல்வார்கள்.

அந்த சமயங்களில் வாடிக்கையாளர்களிடம் பணியாளர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களை பற்றி ஹோட்டல் உரிமையாளரிடம் கூறுவார்கள். இப்படி மிஸ்டரி ஷாப்பர்கள் பணியாளர்களின் நடத்தையை பற்றி அறிந்து கொள்ள உதவியாக இருப்பார்கள். இது போன்ற வேலைகளை செய்பவர்களும் ஆண்டிற்கு குறைந்தது இந்திய மதிப்பில் 50 லட்சத்திற்கு மேல் வருமானமாக ஈட்டுகிறார்கள்.

3.மாஷ்டர் சோமலியர் (Master Somalier)

பெரிய பெரிய நட்சத்திர விடுதிகளில் உணவுடன் சேர்த்து சிலர் மது பானங்களையும் ஆர்டர் செய்வார்கள். ஆனால், அந்த மதுபானம் உணவுக்கு பொருத்தமானதாகவும் எந்த பின் விளைவுகளும் ஏற்படாமல் இருக்க வேண்டும்.

அதற்காக இப்படி வேறு வேறு வகையான உணவுகளுடன் பல்வேறு வகையான மது பானங்களை அருந்தி ஆராய்வதற்காக நியமிக்கப்படும் நபருக்கு பெயரே மாஸ்டர் சோமாலியர். இவர்களது வருட வருமானம் ஏறத்தாழ 60 லட்சத்திற்கும் மேல் இருக்கும்.

2. ப்ரொபஷனல் எத்திகல் ஹேக்கர்கள்(Professional Ethical Hackers)

ஹேக்கர்ஸ் என கூறினாலே, வங்கிகளில் பணங்களை திருடுபவர்களும் மற்றவர் கணினியிலிருந்து தகவல்களை திருடுபவர்களும் தான் உங்களுக்கு நினைவுக்கு வருவார்கள்.
ஆனால், எத்திக்கல் ஹேக்கர்ஸ் என அழைக்கப்படும் இவர்களுக்கு வேலையே ஹேக்கிங் செய்வதுதான். இதுபோன்ற நபர்களை வைத்து சில பெரிய மென்பொருள் நிறுவனங்கள், வலைதளங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் தங்களுடைய வலைதளங்களிலும் மென்பொருள் கட்டமைப்புகளிலும் ஏதேனும் கோளாறு உள்ளதா பாதுகாப்பாக உள்ளதா போன்ற சோதனைகளை செய்து அவற்றை பாதுகாத்துக் கொள்வார்கள். இவ்வாறு ஹேக் செய்து பார்ப்பதற்காகவே எத்திக்கல் ஹேக்கர்ஸ் உதவுகிறார்கள்.

அதுமட்டுமின்றி அரசாங்கம் சில குற்றவாளிகளை உளவு பார்ப்பதற்காகவும் எத்திக்கல் ஹேக்கர்களை தான் நாடுகிறார்கள். எனவே, எத்திக்கல் ஹேக்கர்கள் ஆண்டிற்கு குறைந்தபட்சமாக 80 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்.

1. நீர்மூழ்கிக் கப்பல் சமையல் கலைஞர்கள் (Submarine Cook)

இந்தக் காலத்தில் செஃப் என கூறினாலே அவர்கள் கண்டிப்பாக அதிக வருமானம் பெறுபவராக தான் இருப்பார்கள். அதுவும் பல பெரிய நட்சத்திர விடுதிகளிலும் சொகுசு கப்பல்,விமான நிறுவனம் மற்றும் பெரிய நிறுவனங்களில் செஃப் ஆக இருப்பவர்களின் வருட வருமானத்தை கேட்டாலே ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

அதுபோலத்தான் ராணுவத்தின் ஒரு துறையான நீர்மூழ்கி கப்பலில் உள்ளவர்களுக்கு சமைத்துக் கொடுப்பதற்கு என இருப்பவர்களே நீர்மூழ்கிக்கப்பல் சமையல் கலைஞர்கள். இவர்கள் பல மாதங்களாக தொடர்ந்து கடலுக்கு அடியில் நீர் மூழ்கி கப்பலில் உள்ள ராணுவ வீரர்களுக்காக சமைப்பவர்கள். அப்படிப்பட்ட இவர்களுக்கு குறைவான சம்பளமா இருக்கப்போகிறது. இவர்களின் வருட வருமானம் ஆண்டிற்கு 90 லட்சம் முதல் 1.75 கோடியாக உள்ளது.

Read More