HybridAnalyzer Tamil: History

Hot

Showing posts with label History. Show all posts
Showing posts with label History. Show all posts

Thursday, 22 October 2020

பெரம்பலூர் அருகே கிடைத்த 12 கோடி வருட பழைய டைனோசர் முட்டைகள்!

October 22, 2020 0
12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகள் தமிழ்நாட்டின் பெரம்பலூர் அருகே கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
பெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. 

பெரம்பலூர் அருகே குன்னம் பெரிய ஏரியில் நேற்று மண் எடுத்து கொண்டிருந்தபோது, அம்மோனைட் எனப்படும், கடல்வாழ் நத்தைகளின் படிமங்களும் சிதைவுற்ற நிலையில் கிடைத்துள்ளது. மேலும் அந்த ஏரியில் டைனோசர் முட்டை போல் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்துள்ளன. அதனை புவியியல் ஆய்வாளர் வந்து பார்வையிட்டு, அது டைனோசர் முட்டையா?, இல்லையா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த கடல்வாழ் நத்தைகளின் படிமங்களையும், உருண்டை வடிவிலான படிமங்களையும் வருவாய்த்துறையினர் கைப்பற்றி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும் குன்னம் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்படிமங்களை அதே இடத்திலும் பாதுகாத்தும், சிலவற்றை அதன் அருகிலுள்ள பள்ளிகளிலும் சேகரித்து வைத்தும் உள்ளூர் அளவிலான காட்சியகங்கள் ஏற்படுத்தி பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல்படிமங்கள் கிடைக்கப்பட்டுள்ள பகுதிகளை தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று சமுக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த் டைனோசர் முட்டைகள் மாமிச கார்னோட்டாரஸ் (Carnotaurus) மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ சவுரபோட் டைனோசரின் முட்டைகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

டைனோசர் முட்டைகளாக இருந்தால் இது சுமார் 12 கோடி முதல் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தனித்துவமான கார்னோட்டாரஸ் டைனோசர்கள் தென் அமெரிக்க கண்டத்தில் சுற்றித் திரிந்தன, மேலும் சில அசாதாரண உடல் குணங்கள் இருந்தபோதிலும், அவை மிகவும் ஆதிக்கம் செலுத்தும் வேட்டையாடுபவைகளாக இருந்தன.

கார்னோட்டரஸ் வேகம் மற்றும் சுறுசுறுப்பான விலங்கினம், 1.5 டன் வரை எடையும், சுமார் 30 அடி நீளமும் கொண்டது. பெரிய கால் தசைகள் கொண்ட,மிகவும் திறமையான வேட்டையாடும் ஒன்று என கூறப்படுகிறது.
Read More

Sunday, 18 October 2020

கவிஞர் கண்ணதாசன் பற்றிய 35 சுவாரசியமான விஷயங்கள்!

October 18, 2020 0

1.கண்ணதாசனுடைய முதல் மனைவி பெயர் "லீலாவதி" . இவர் ஒரு விலைமகளாவார். திருமணமான சில மாதங்களிலேயே, கண்ணதாசனைப் பிரிந்துபோய் விட்டார். எனினும், இது முறையற்ற திருமணம் என்பதால், கண்ணதாசனின் திருமணக்கணக்கில் பதிவாகவில்லை.2.கண்ணதாசன், எட்டுநாட்களில், ஏறத்தாழ 96 மணி நேரத்தில், குற்றாலத்தில், "இயேசு காவியம்" என்ற காவியத்தையே இயற்றிமுடித்தாா். இது ஒரு அசாத்திய சாதனை நிகழ்வாக இன்றளவும் உள்ளது.

3."அம்பிகை அழகு தரிசனம்" என்ற நூறு பாடல்களடங்கிய நூலையும், கண்ணதாசன் இயற்றியது, சாதனையான நிகழ்வாகும். இந்த நூலை, ஒரே நாளில் இயற்றினாரென்றும், மூன்றுநாட்களில் இயற்றினாரென்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

4.கண்ணதாசன், திருக்குரானுக்கும் உரையெழுத முயன்றார். இஸ்லாமியரின் கடும் எதிர்ப்பு காரணமாக, அம்முயற்சியைக் கைவிட்டார்.

5.கண்ணதாசன் எதிர்பார்த்தது போலவே, அவருடைய ரசனைக்கு, மிகவும் பொருத்தமாக ஒரு காதலி வாய்த்தார். அவர் பெயர் "பானு" என்பதாகும். கண்ணதாசன் இவரை மணந்துகொள்ள நினைத்தபோது, இவர் காலமாகி விட்டாா். அந்த வேதனையிலிருந்தபோதுதான், "வசந்தமாளிகை" படவாய்ப்பு வந்தது. அப்படத்தின் கதை, கிட்டத்தட்ட தன் காதல்கதை போலவே இருப்பதாக அவர் கருதியதால், அப்படத்தின் பாடல்களை, மேற்படியான தன்வாழ்வுச் சம்பவங்களைக் குறிப்பிடும்படியாக, மிக உணர்ச்சிப்பூர்வமானவையாகப் படைத்தார்.

6.கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த தமிழ்நடிகை தேவிகா ஆவார். இவருடைய வெளிப்படையான குணம், கண்ணதாசனுக்கு மிகவும் பிடிக்கும்.தான் தயாரிக்கவிருந்த நான்கு படங்களிலும், கண்ணதாசன், தேவிகாவை ஒப்பந்தம் செய்திருந்தார்.அப்படங்கள் எடுக்கப்படவில்லை.

7. எம்.ஜி.ஆரை வைத்து, "ஊமையன் கோட்டை" என்ற படத்தைத் தயாரிக்க, கண்ணதாசன் முடிவெடுத்தார். எம்.ஜி.ஆரின் தாமதத்தால், படம் தாமதமாகவே, அம்முயற்சியைக் கைவிட்டு, எம்.ஜி.ஆருக்கு தான் யாரென்பதைக் காட்ட விரும்பி, மார்க்கெட் இழந்து, பெருங்கடனாளியாகிவிட்டிருந்த டி.ஆர். மஹாலிங்கத்தை நாயகனாக்கி "மாலையிட்ட மங்கை" படம் தயாரித்தார். படம் அமோக வெற்றிபெற்றது. தனது விருப்பம்போல பாடல்களை எழுத, கண்ணதாசன் தயாரித்த முதல்படமான இப்படத்தில்தான், மனோரமா அறிமுகமானார். டி.ஆர்.மஹாலிங்கம் புதுவாழ்வு பெற்றார்.

8.கண்ணதாசன் மிக விரைவாக எழுதிய பாடல், "நெஞ்சில் ஓர் ஆலயம்" படத்தில் இடம்பெற்ற "முத்தான முத்தல்லவோ?" என்ற பாடலாகும்; மிக தாமதமாக எழுதிய பாடல், "நெஞ்சம் மறப்பதில்லை" படத்தில் இடம்பெற்ற "நெஞ்சம் மறப்பதில்லை" என்ற பாடலாகும். தாமதத்திற்கு, இவர் காரணரல்லர். இசைமெட்டு உருவாக்கத்தில் ஏற்பட்ட தாமதம்தான் காரணம்.

9."பெத்தடின்" போதை மருந்துக்கு அடிமையான கண்ணதாசன், எவ்வொரு முறிவு மருந்தின் உதவியுமின்றி, தன் மனஉறுதியாலேயே, ஒருசில நாட்களில், அப்பழக்கத்திலிருந்து மீண்டது அசாத்திய சாதனையாகும். இத்தனைக்கும் இவர் பயன்படுத்திய பெத்தடின் மருந்தின் அளவு மிகவும் அதிகமென்பது குறிப்பிடத்தக்கது.

10. தான் அமெரிக்காவிலிருந்து, சிகிச்சை முடிந்து திரும்பியதும் "மனோரமாவிற்கு" பாராட்டுவிழா எடுக்கத் திட்டமிட்டிருந்தார் கண்ணதாசன். அது நிறைவேறாமலேயே காலமாகிவிட்டார்.

11. "மூன்றாம்பிறை" படத்தோடு, பாடல்களெழுதுவதை நிறுத்திவிட்டு, நூல்களெழுதத் திட்டமிட்டிருந்தார் கண்ணதாசன். அமெரிக்காவில், சிகிச்சை முடிந்து திரும்பியதும், முழுநேர எழுத்தாளராக மாற நினைத்திருந்தவரை, விதி விடவில்லை.

12. 54 வயதிற்குள், சுமார் 4500 படப் பாடல்கள், சுமார் 4000 கவிதைகள், 6 படங்கள் தயாரிப்பு, எண்ணற்ற நூல்கள், கடன் தொல்லைச் சிக்கல்கள், அரசியல் பேச்சுக்கள், 3 திருமணங்களில் 14 குழந்தைகள், பல படங்களுக்குக் கதை−வசனம்,7 பத்திரிக்கைகளில் ஆசிரியர்−எழுத்தாளர் பொறுப்புக்கள், பல கவியரங்க நிகழ்வுகள், விலைமகளிர் தொடர்புகள் என கண்ணதாசன் வாழ்வியல் சம்பவங்களை நினைத்தால், இவை எப்படி சாத்தியமாயின? என தலையே சுற்றும். அவருக்கோ இவை சர்வசாதாரண நிகழ்வுகளாக இருந்தன.

13. எம்.ஜி.ஆரைக் கடுமையாகச் சாடியவர் கண்ணதாசன். ஆனால், எம்.ஜி.ஆர் இவற்றை மனதில் கொள்ளாமல், அரசவைக்கவிஞராக கண்ணதாசனையே நியமித்தார்.

14.கண்ணதாசனுக்கு, மதுப்பழக்கத்தை, புதுக்கோட்டையில் கற்றுத்தந்தவர், "கம்பதாசன்" என்ற பாடலாசிரியராவார். காதல் தோல்வியால், பெருங்குடியராக மாறினார். இவருடைய வேகமாக பாடல் எழுதும் திறமை, டப்பிங் படங்களுக்கு விரைவாக வசனமெழுதும் திறமை ஆகியன கண்ணதாசனுக்கு உந்துதலாக அமைந்தன.

15.கண்ணதாசனின் சொந்த படமான "கவலையில்லாத மனிதன்" படம், அப்படத்தின் நாயகனான சந்திரபாபுவின் கால்ஷீட் சொதப்பல்களால், காலதாமதமாக வெளியாகி, படுதோல்வியடைந்தது. அக்கடனிலிருந்து மீள கண்ணதாசனுக்கு நீண்டகாலமானது. பிற்காலத்தில் சந்திரபாபு, "தட்டுங்கள் திறக்கப்படும்" என்ற சொந்த படத்தை, கடும் வறுமைக்கிடையில் தயாரித்து, இயக்கி, நடித்தபோது, பாடல்களெழுத, கண்ணதாசன் உதவியை நாடினார். கண்ணதாசன், பழைய நிகழ்வை மனதில் கொள்ளாமல், கொடுத்ததை வாங்கிக் கொண்டு, சந்திரபாபுவிற்குப் பாடல்கள் எழுதித் தந்தார்.

16. கண்ணதாசன், பெரும்பாலும் மெட்டுக்களுக்குப் பாட்டெழுதுவதையே விரும்புவார். ஆரம்ப காலங்களில், தன் கைப்பட பாடல்களெழுதியவர், பிற்காலங்களில், தான் சொல்லச்சொல்ல, உதவியாளர்கள் மூலம் எழுதச்செய்தார்.

17. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர் டி.ஆர்.சுந்தரம், கறாருக்கும், கண்டிப்பிற்கும் பிரபலமானவர். பெரிய நாயகர்களைக் கூட, திட்டியோ, அடித்தோ வேலைவாங்கக்கூடிய ஆளுமை கொண்டவர். ஆனால், கண்ணதாசனிடம் மட்டும், அவர் இறுதிவரை, இரக்கமும், அன்பும் கொண்டிருந்தார். இவரும், சின்னப்பாதேவரும், கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த தயாரிப்பாளர்களாவர்.

18. எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கிய முதல் படமான "நாடோடி மன்னனில்," கண்ணதாசனுக்குப் பாடல்களெழுத வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அதன் வசனத்தைச் சிறப்பாக எழுதிப் புகழ்பெற்றார் (வசன உதவியாளர் இரவீந்திரன்).

19. "பொண்ணுக்குத் தங்க மனசு" படத்தில் இடம்பெற்ற, "தேன் சிந்துதே வானம்" பாடல் மெட்டுக்குப் பாட்டெழுத, கண்ணதாசன் எடுத்துக்கொண்டது சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே. இதே பாடலின் தெலுங்கு மெட்டுக்குப் பாட்டெழுத, தெலுங்குப் பாடலாசிரியருக்கு, 3,4 நாட்கள் தேவைப்பட்டன.

20. இல்லறம்−துறவறம் பற்றிய சிறந்த போட்டிப் பாடலான "இது மாலை நேரத்து மயக்கம்" (படம்; தரிசனம்) பாடலை எழுத, கண்ணதாசன் எடுத்துக் கொண்ட நேரம், 45 நிமிடங்கள் மட்டுமே.

21.16 வயதிலேயே, சென்னைக்கு ஓடிவந்த கண்ணதாசன், முதலில் நடிகராகவே விரும்பி, "சந்திரசேகரன்" என்ற வேறுபெயரில், வாய்ப்பு தேடி அலைந்தார். ஆனால், எழுத்தாளர் வாய்ப்பே, அவருக்கு முதலில் வாய்த்ததால் எழுத்தாளரானார்.

22. மது பருகினால்தான் இவருக்குப் பாட்டெழுத வருமென்பதெல்லாம் பொய். பெரும்பாலும் பாடலெழுதும்போது மது பருகமாட்டார் என்பதே உண்மை.

23. உணவு, உறக்கம் இரண்டிலுமே கண்ணதாசன் அதிதீவிரப் பிரியராக இருந்தார். நன்கு தூங்கிவிட்டதாலேயே, தொடர்வண்டி பயணத்தைத் தவறவிட்டதும் உண்டு.

24. கண்ணதாசனுக்கு, திருக்குறள் முழுவதற்கும், புதுமையான கண்ணோட்டத்துடன் உரையெழுத பெரிதும் ஆர்வமும், திட்டமுமிருந்தது. ஆனால், காமத்துப்பாலுக்கு மட்டுமே, அவரால் உரைஎழுத முடிந்தது.

25. இவர் பாட்டெழுதும் சூழலே விசித்திரமாக இருக்கும். இவருடைய கடனாளர்கள், அறைவாசலில் நின்றபடி, கடனை வசூலிக்கக் காத்திருக்கும்போது கூட, இவர் அதை சட்டைசெய்யாமல், தீவிரமாக பாடலெழுதுவார். சில சமயங்களில், பாடலுக்கான சூழலை விளக்கும்போது, கண்ணதாசன் ஏதேனும் வேடிக்கையான நிகழ்வுகளைச் செய்தவாறு இருப்பார். பாட்டுச்சூழலை விளக்குபவர், தயங்கி நிறுத்திவிட்டால், அவர் முன்புகூறிய பாட்டுச்சூழல் விபரத்தை, துல்லியமாகக் கூறி, அவரைத் திகைக்க வைப்பார். பாட்டுச்சூழலைக் கூறியவுடன், பெரும்பாலும் 30 நிமிடங்களில், பாடலை எழுதிவிடுவார்.

26. எம்.ஜி.ஆருடைய அரசியலைப் பற்றி, இவரிடம் கருத்துகேட்டபோது, இவரளித்த பதில் " ஏட்டிலே தினத்தந்தி; பாட்டிலே எலந்தப்பழம்; நாட்டிலே எம்.ஜி.ஆர். இதுதான் இன்றைய நிலை" என்றாா்.

27. தி.மு.கவை விட்டு விலகிய போது, "போய் வருகிறேன்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய அக்கட்டுரை, தமிழில் தோன்றிய மிகச்சிறந்த அரசியல் கட்டுரைகளுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

28. திருப்பாவை, திருவெம்பாவை போல, கண்ணதாசன் எழுதிய "தைப்பாவை" கவிதையும் பிரபலமானது. தை மாதச் சிறப்புகளை அதில் வர்ணித்திருப்பார்.

29. தான் வளர்த்த நாய் "சீசர்" இறந்தபோது, அதற்கும் ஒரு இரங்கற்பா இயற்றினாா். வளர்ப்பு நாயின் மறைவிற்கும் இரங்கற்பா இயற்றிய முதல் இந்திய கவிஞர் கண்ணதாசன்தான்.

30. ஒருமுறை, கண்ணதாசன், தான் இறந்துவிட்டதாக, தானே பலருக்கும் தொலைபேசியில் விபரம் தெரிவித்தார். பலரும், பதறியடித்து ஓடிவர, தன்மீதான சமூக மதிப்பைத் தானறிய இவ்வாறு செய்ததாக விளக்கமளித்தார்.

31. காமராஜர் வரலாற்றைப் படமாகத் தயாரிக்கத் திட்டமிட்டார் கண்ணதாசன். ஓரிரு காட்சிகள் எடுக்கப்பட்டதோடு, படம் நின்றுபோனது.

32. கண்ணதாசன் எழுதிய காவியங்களுள், ஒரு கவிதை கூட கிடைக்காமல், முழுமையாக அழிந்துபோன காவியம் "ஈழமகள் கண்ணீர்" என்பதாகும்.

33. "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில், ஒரு பாடல் சூழலுக்குப், பல பாடலாசிரியர்கள் மிக சிரமப்பட்டு எழுதியும், எம்.ஜி.ஆருக்கு அவை பிடிக்கவில்லை. இறுதியில், கண்ணதாசனை எழுதவைக்குமாறு, இயக்குநரிடம் கூறினார். அவ்வாறே கண்ணதாசன் ஒரே முறையில் எழுதிய அந்த பாடல், சூழலுக்குப் பொருத்தமாகவும், அனைவருக்கும் பிடித்தமானதாகவும் அமைந்து போனது. அந்த பாடல்தான், "அதோ அந்த பறவை போல" பாடலாகும்.

34. கண்ணதாசனின் பாடல்களுக்கு உந்துசக்தியாக விளங்கியவை, அவருடைய தாயார் விசாலாட்சி அம்மையார் அவர்கள் பாடிய தாலாட்டுக்களும், கம்பராமாயணம் காவியமுமே ஆகும்.

35. "அவன்தான் மனிதன்" படத்தில், இவரெழுதிய "அன்பு நடமாடும்" என்ற பாடலின் வரிகள் யாவுமே, இறுதியில் "மே" என்ற எழுத்திலேயே முடியும் சிறப்புடையது. இப்பாடலையும், இவர், மிக விரைவாக எழுதியதுதான் ஆச்சர்யமானது.

Read More

Saturday, 2 November 2019

லண்டனில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான இறக்கையுடன் கூடிய சிறிய மனித எலும்புக்கூடு!

November 02, 2019 0
19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய பொருட்கள் சேவைகளின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இறக்கையுடன் கூடிய பதப்படுத்தப்பட்ட எலும்புக்கூடு வேற்றுகிரகவாசி என சந்தேகங்கள் எழுந்துள்ளது.

லண்டனில் ஒரு வீட்டிற்கு கீழே சில வித்தியாசமான எலும்புக்கூடுகள் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தியபோது அந்த இடத்தில் இறக்கைகளுடன் கூடிய இதுவரை பூமியில் பார்த்திராத வித்தியாசமான எலும்புக்கூடுகளும் வேறு சில சிறிய பதப்படுத்தப்பட்ட மர்மமான உயிரினங்களின் உடலும், ஜாடிகளில் அடைக்கப்பட்ட மனிதர்களின் இதயம் போன்ற உறுப்புகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் சில வித்தியாசமான பொருட்கள் சுவற்றில் மாற்றும்படி பிரேம் செய்யப்பட்டும் இருந்துள்ளது.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 1800-களில் வாழ்ந்த தாமஸ் தியோடார் மெர்லின் எனும் உயிரியலாளர்-ன் வீடுதான் அது என்றும், அவர் தான் இந்த மர்மமான உயிரினங்களின் உடலை சேமித்து வைத்திருந்தார் என்பதும் தெரியவந்தது. 1960-களில் லண்டனின் அந்த குறிப்பிட்ட பகுதியில் இருந்த பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்டி உள்ளார்கள். அந்த சமயத்தில் இந்த வீடு கைவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த வீட்டின் பாதாள அறையிலிருந்து தான் இவைகள் மீட்கப்பட்டுள்ளது.

தாமஸ் தியோடர் மெர்லின் தனது குறிப்புகளில் எழுதியிருந்ததை, ஓவியர் அலெக்ஸ் சி.எப் என்பவர் முதலில் கண்டறிந்து, அதன் பிறகே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த டைரியில் மேலும் பல புரியாத குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன.

இதைப் பற்றி குறிப்பிட்ட அதிகாரிகள் கூறும்போது, அந்த டைரியில் இருந்த குறிப்புகள் மூலமாகவே இந்த இடத்தை கண்டுபிடிக்க முடிந்தது. எனவே அதில் உள்ள மற்ற குறிப்புகளையும் புரிந்து கொண்டால் இன்னும் பல ரகசியங்கள் வெளிப்பட வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்கள்.

தற்போது கிடைத்த மர்மமான பொருட்கள் ஏலியன் சம்பந்தப்பட்டதாக இருக்குமா என்ற கோணத்திலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
Read More

Tuesday, 24 September 2019

ஆங்கிலேயர்கள் இந்தியாவின் மீது படையெடுக்க முக்கிய காரணமாக இருந்தது இந்த கருப்பன் தான்!

September 24, 2019 0

இந்தக் கருப்பனுக்கு  வெள்ளையர் அடிமையான கதை கேட்பதற்கு வியப்பாக, வேடிக்கையாக இருந்தாலும் உலக வரலாற்றில் இதுதான் நடந்த உண்மை.


நானறிந்த வரை வெறும் 4.5 மி.மீ அளவில் சிறு உருண்டையாகத் தோற்றம் காட்டி காய்ந்து கறுத்த உருகொண்டு, கறுப்புத் தங்கம் என்ற புனைபெயரால் அழைக்கப்பட்டு, கைவிரலிடுக்கினில் கூட நசுங்கி பொடிபடக்கூடிய மிகச்சிறிய அளவிலான உருண்டைதான்.

 நம் நாடு ஆங்கிலேயர்களின் கீழ் அடிமையாகி பலநூறு ஆண்டுகள் துன்பங்கள் பலவற்றை அனுபவிக்க முழுமுதல் காரணமாக இருந்தது. அன்றைக்கு இச்சிறு உருண்டைதான் உலக வரலாற்றையே மாற்றி அமைத்தது என கூறினால் அது மிகையாகாது.


இந்தியாவை இயற்கை வாழிடமாகக் கொண்டு பிறந்த இது,  வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டே கேரளக் கடற்கரைப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி இந்தியர்களின் வாணிகத்தில் பெரும்பங்காற்றி 'கருப்புத் தங்கம்'  என்ற சிறப்பு விருதுகளையும் அன்றைக்கே அடைந்தது. பண்டைக்காலத்தில் பணத்திற்கு மாற்றாக இதனை உபயோகப்படுத்தியதாகவும் வரலாறு கூறுகிறது.


இன்றைக்கு அரபு நாடுகளின் எண்ணெய் வளம் உலகப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதைப்போல, அன்றைக்கு உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் வலிமையோடு, உலகச் சந்தையில் முன்னணியில் இருந்தது காரணமாகவே இதன் பிறப்பிடம் தேடி இந்தியா வந்தனர் அந்நிய நாட்டு வணிகர்கள்.

ஐரோப்பிய நாடுகளில் இவற்றின் தேவை மிக அதிகமாக இருந்ததாலும், இடைத்தரகர்கள் விலையை உயர்த்திக் கொண்டே இருந்ததாலும்,  இதன் இறக்குமதியை அதிகப்படுத்தும் பொருட்டே,  இந்தியாவுக்கு முதலில் கடல்வழி கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இந்தியாவை ஐரோப்பியர் கைப்பற்றி அரசாளவும், அமெரிக்கா போன்ற கண்டங்களைக் கண்டுபிடித்துக் குடியேற்றம் செய்யவும் வழிவகை செய்தது.
சிறப்பம்சமான , தனித்துவமான காரச்சுவை மிக்க இந்த சின்னஞ்சிறு மிளகு இல்லாவிடில் நம் நாட்டின் வரலாறே வேறு வகையில் மாறியிருக்கும்.


லண்டனில் டச்சு வணிகர்கள் மிளகிற்கு ஐந்து சில்லிங் விலை ஏற்றம் செய்ததன் காரணத்தால்தான் இந்தியாவிலிருந்து நேரடி கொள்முதல் செய்யும் நோக்கில் ஆங்கிலேயர்களால் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற நிறுவனமே துவங்கப்பட்டது.

Read More

Thursday, 9 August 2018

ஈமு மற்றும் ஆடுகளுடன் போரிட்ட புத்திசாலி நாடுகள் | Countries that attack against goats and emu in Tamil

August 09, 2018 0
ஒரு நாட்டின் பாதுகாப்பும், பலமும் நாட்டினுடைய ராணுவத்தை சார்ந்தே உள்ளது. சில சமயங்களில் எல்லைகளை விரிவு படுத்தவும் பல சமயங்களில் பாதுகாக்கவும் இராணுவ மானது ஆயுதங்களுடன் போரிடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் தற்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு நாடுகளை பற்றிய தகவல்கள் உங்களுக்கு நகைச்சுவையாகவும் தோன்றலாம் ஆனால் இது உண்மையாக நடந்த சம்பவம்.

1. ஈமு உடன் நடந்த போர் - The Great Emu War
            
ஈமு கோழியை பற்றி நாம் அனைவரும் அறிந்தது தான். சில வருடங்களுக்கு முன் தமிழ் நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை கூட ஏற்படுத்தியது. அப்படிப்பட்ட இந்த ஈமு கோழி உடன் தான் ஆஸ்திரேலியாவில் ஒரு போரே நடந்துள்ளது.
முதல் உலகப்போர் முடிந்த சமயத்தில் பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சிலர் ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள காடுகளை சரி செய்து விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள்.
இந்த நேரத்தில்தான் ஈமு கோழிகளால் பல பிரச்சினைகள் நேர்ந்தது. பொதுவாக ஈமு கோழிகள் வருடத்தின் ஒரு பருவத்தில் அடர்ந்த காடுகளிலும் மற்றொரு பருவத்தில் கடற்கரைகளிலும் உணவிற்காக இடம்பெயர்ந்து வாழும் தன்மை கொண்டவை.
ஆனால் இங்கு விவசாயம் செழிக்க ஆரம்பித்தால் ஈமு கோழிகள் தொடர்ந்து அதே இடத்தில் தங்கி விவசாய நிலங்களை உணவிற்காக சூறையாட ஆரம்பித்தன.
இதனால் பெரிய இழப்பிற்கு உள்ளான விவசாயிகள் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து அவைகளை இயந்திரத் துப்பாக்கி கொண்டு தாக்க வேண்டும் என முறையிட்டார்கள்.
அது புதிய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்கும் சமயம் என்பதால் ஈமு கோழிகளை விரட்டுவது சிறந்த பயிற்சியாக இருக்கும் என எண்ணி பாதுகாப்பமைச்சரும் ஒப்புக்கொண்டார்.
உடனடியாக திட்டம் செயல்படுத்தப்பட்டு சில ராணுவ வீரர்கள் எந்திர துப்பாக்கிகளுடன் விவசாய நிலத்தை அடைந்தார்கள்.
முதல் நாள் திட்டம் தீட்டி விட்டு இரண்டாவது நாளிலிருந்து அவைகளை தாக்க ஆரம்பித்துள்ளார்கள்.
ஆனால் சுதாரித்துக் கொண்ட ஈமு கோழிகள் மூன்றாவது நாளில் இருந்து சிறு சிறு கூட்டமாக வந்து பயிரை மேய்ந்து விட்டு ராணுவ வீரர்களை ஏமாற்றி விட்டுச் சென்றுள்ளன.
கிட்டத்தட்ட 37 நாட்கள் நடந்த இந்தப் போரில் 20,000 ஈமுக் கோழிகளில் வெறும் 500 க்கும் குறைவானவைகளை மட்டுமே அளிக்க முடிந்துள்ளது. ஒரு மாதத்திற்கு மேல் ஆனதால் போர் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டு அனுப்பப்பட்ட வீரர்கள் நாடு திரும்பினார்கள்.
அதற்குப் பின் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வீரர்களை தலைமை தாங்கிய மேஜர், "நாம் என்னதான் ஆயுதங்களைக் கொண்டு தாக்கினாலும் அந்த உயிரினங்கள் எவ்வித அச்சமும் கொள்ளாமல் தங்களுக்குள் திட்டம் தீட்டி சிறுசிறு குழுக்களாக செயல்படுகின்றன". இது போன்ற ஒரு படை நம்மிடம் இருந்தால் உலகின் எந்த நாட்டையும் எளிதாக தோல்வியடையச் செய்து விடலாம் என கூறியுள்ளார்.
அதற்குப்பின் ஜேம்ஸ் மிட்சல் என்ற கவர்னரின் ஆர்வத்தால் மீண்டும் இரண்டாவது முயற்சி செய்து அதிலும் தோல்வியையே சந்தித்தார்கள்.
அதிக பொருட்செலவு ஏற்படும் தோல்வியடைந்ததால் அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் விவசாயிகளுக்கு இடையூறாக உள்ள உயிரினங்களை வேட்டையாடுபவர்ளுக்கு பரிசு வழங்கப்படும் என கூறப்பட்டிருப்பதால் அடுத்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வேட்டையாடப்பட்டன.
இதைப் பற்றி அறிந்த உயிரியல் ஆர்வலர்கள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இந்த சம்பவம் நடந்தது 1932இல் என்பது குறிப்பிடத்தக்கது.

2.புராஜெக்ட் இசபெல்லா - project isabella

இந்தப் போர் எக்குடாஸ் நாட்டின் கலபகோஸ் என்ற தீவில் ஆடுகளுக்கு எதிராக நடந்தது. முதலில் அந்த தீவில் ஆடுகளே கிடையாது.  முதலில் ஸ்பானிஸ் காரர்களே உணவிற்காக பயன்படும் என சில ஆடுகளை விட்டுள்ளார்கள். ஆனால் இந்த செயல் அங்குள்ள கடற் கொள்ளையர்களுக்கு சாதகமாக இருந்ததால் சில நாய்களை அனுப்பி அந்த ஆடுகளை அழிக்க எண்ணினார்கள். அதன்பின் 1959இல் மீன் பிடிக்க சென்றவர்கள் மூன்று ஆடுகளை அந்த தீவில் விட்டு விட்டு சென்றுள்ளார்கள். அதில் இரண்டு பெண் ஆடும் ஒரு ஆடும் அடங்கும். அடுத்த 14 ஆண்டுகளில் மூன்று ஆடுகள் 30 ஆயிரம் ஆண்டுகளாக பெருகி தீவையே ஆக்கிரமித்துள்ளன. 1990இல் கிட்டத்தட்ட இதன் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தைத் தொட்டது. இதன் காரணமாக தீவில் உள்ள உணவுகள் பற்றாக்குறை ஏற்பட்டதால் உலகின் கலப்பெகஸ் தீவில் மட்டுமே காணப்படும் கலபெகஸ் இன ஆமைகள் அழியத் துவங்கின.
தீவில் மற்ற கொன்றுண்ணிகள் ஏதும் இல்லாததால் ஆடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருந்தது. அதனால் முதலில் சிங்கங்களை அனுப்பி ஆடுகளை அழிக்க எண்ணினார்கள். ஆனால் இரண்டரை லட்சம் ஆடுகளை அழிக்க எத்தனை சிங்கங்களை அனுப்ப என்பதை கருத்தில் கொண்டு வேட்டைக்காரர்களை அனுப்பினார்கள்.
ஆனால் அவர்களால் எதிர்பார்த்த அளவிற்கு ஆடுகளின் எண்ணிக்கையை குறைக்க முடியவில்லை.
அதனால் குறிபார்த்து சுடும் பல வீரர்களை நியூசிலாந்தில் இருந்து வரவழைத்து ஹெலிகாப்டர்கள் மூலமாக சுட ஆரம்பித்தார்கள்.
இவர்கள் களத்தில் இறங்கிய ஒரே வருடத்தில் 90 சதவீத ஆடுகள் அழிக்கப்பட்டன. ஆனால் இவற்றுள் சில ஆடுகள் குகைக்குள் புகுந்து மறைந்து கொண்டு மீண்டும் தனது இனத்தை பெருக ஆரம்பித்தன. இதனால் முன்பு எடுக்கப்பட்ட போர் முயற்சியானது தோல்வியை சந்தித்தது. எனவே குகைகளில் மறைந்து உள்ள ஆடுகளை கண்டுபிடிக்க சில பெண் ஆடுகளைப் பிடித்து அவற்றின் கழுத்தில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி தீவினுள் அனுப்பினார்கள். இப்போது அந்த ஆடுகள் செல்லுமிடமெல்லாம் இவர்களும் சென்று அங்கிருந்த ஆடுகளை அழித்து விட்டு இறுதியில் ட்ராக்கிங் சிப் பொருத்தப்பட்ட ஆடுகளை மட்டும் உயிருடன் விட்டு விட்டார்கள். இந்தப் போர் 1990 முதல் 2006 வரை காலபேகஸ் கான்செர்வெண்சி என்ற அமெரிக்க நிறுவனத்தால் முன்னின்று நடத்தப்பட்டது.
இந்த தீவில் தான் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி டார்வின் தனது முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

Friday, 6 April 2018

தற்சமயம் உள்ள 7 உலக அதிசயங்கள் |7 World Wonders in Tamil

April 06, 2018 0
தற்போது உள்ள உலக அதிசயங்கள் ஏழும் 2000 முதல் 2007-ம் ஆண்டு வரை உலக மக்களிடம் வாக்கு சேகரிக்கப்பட்டு அதன் அடிபடையில் தேர்ந்தெடுக்க பட்டுள்ளன.

Third party image reference
1.சீன பெருஞ்சுவர் - The Great Wall of China
கீ.மூ 200-களில் அண்ணிய ஊடுருவலை தடுப்பதர்க்காக சின் ஹாங்க் என்ற அரசர் காலத்தில் சுமார் 21196KM தொலைவிற்க்கு கட்டப்பட்ட பிரம்மாண்டமான சுவர் ஆகும்.

Third party image reference
2.ஜொர்டான் நாட்டின் பெட்ரா நகரம் - Jourdan's Petra
கி.மு நான்காம் நூற்றாண்டுகளில் ஒரே பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட மிக பெரிய பிரம்மாண்டம் தான் இந்த நகரம். 1985-ல் இதை யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாகவும் அறிவித்துள்ளது.

Third party image reference
3.கொலோசியம் - Colosseum
இத்தாலியில் உள்ள இது ஒரே சமயத்தில் 5000 முதல் 8000 வரை மக்கள் கூடும் அளவிற்க்கு பெரியது. இதை நாடகம்,விளையாட்டு,விழா போன்றவை நடக்கும் அறங்கமாக பயன்படுதியுள்ளார்கள்.

Third party image reference
4.சீசன் இட்சா - Chichen Itza
இதை வரலாற்று ஆராய்சியாளர்கள் மாயன் பிரமீடுகள் என்றும் குறிபிடுகிரார்கள். பலங்காலத்தில் முன்னேரிய மக்களாக இருந்த மாயன் இன மக்கள் இங்கு வாழ்ந்ததாக கருத படுகிறது. இந்த முலு பிரமிடும் ஒரு நகரமாக இருந்துள்ளது.

Third party image reference
5.மச்சு பிச்சு - Machu Picchu
மலை உச்சியில் அமைந்துள்ள அழகான பழங்கால நகரம் தான் இது. 1450-ல் தான் இந்த நகரத்தை உருவாக்கியுள்ளார்கள்.

Third party image reference
6.தாஜ்மகால் - Taj Mahal
தாஜ்மகாலை பற்றி நான் கூறி தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்று அவசியம்மில்லை. டெல்லியில் உள்ள இது 1653 ஷாஜகானால் தனது காதலி மும்தாஜ்காக கட்டப்பட்டது.

Third party image reference
7.கிரிஸ்ட் தி ரிடிமிர் சிலை - Chirst the Redeemer Statue
பிரெசிலின் பழய தலைநகரான ரியோவில் அமைந்துள்ளா ஏசுநாதர் சிலை தான் இது.

Third party image reference

Original
All New World Wonders Tamil and Details of why world wonders are only 7 will be taken.
Read More

Friday, 16 February 2018

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்

February 16, 2018 0
மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார்.
பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை.
சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.
ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து,
"என்னுடைய சாவு நெருங்கி விட்டது.
எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன.
அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.
முதல் விருப்பமாக,
"என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."
இரண்டாவது,
'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."
மூன்றாவதாக,
"என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."
வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன.
என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.
அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து,
"அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம்.
ஆனால்,
இதற்கான காரணத்தை தாங்கள் எங்களுக்கு விளக்க வேண்டும்" என்று கேட்க,
அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.
1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள்.
மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது.
மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.
மரணம் ஒரு நிதர்சனமான உண்மை .
2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை யாரும் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது.
அது சவக்குழி வரை மட்டும்தான்..!
மனிதர்கள் வீணாக சொத்துக்கள்,செல்வங்கள் போன்றவற்றின் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!
3. உலகையே வென்றவன் இந்த மாவீரன் அலெக்ஸாண்டர்,
சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக..


King Alexander last wishes in tamil
Read More