தொட முடியா உயரத்தில் பறக்கும் கழுகு பற்றிய 7 உண்மைகள்! Facts of Eagle In Tamil - HybridAnalyzer Tamil

Hot

Saturday, 28 September 2019

தொட முடியா உயரத்தில் பறக்கும் கழுகு பற்றிய 7 உண்மைகள்! Facts of Eagle In Tamil

பறவை இனத்திலேயே கழுகு மட்டும்தான் 70 ஆண்டு ஆயுட்காலம் வரை வாழக்கூடியது. மேலும், இவை தான் பறவை இனத்தில் அதிக உயரம் பறக்க கூடியவை.

அழகிய அலகு மற்றும் கண்கள், கூர்மையான நகங்கள் கொண்ட கால்கள் மற்றும் இலகுவான இறக்கைகள் உண்டு.

7. கழுகு பார்வை
என்னதான் கழுகுகள் அதிக உயரத்தில் பறந்தாலும் நிலத்தில் உள்ள உயிரனங்களை தெளிவாக பார்க்கும் கூர்மையான கண் பார்வை உடையவை. கழுகின் பார்வை மனிதனின் பார்வையை விட நான்கு மடங்கு அதிகமானது. இதனால், அது ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும், தரையில் ஓடும் ஒரு முயலை கூட வேட்டையாட முடியும்.

6. கழுகின் விருப்பம்
கழுகுகள் புயல் காற்றின் மூலம் மேகங்களுக்கு மேலாக எளிதில் பறக்க முடிகிறது. இதனால், அவை சிறகினை விரித்து காற்றில் மிதக்கவும், அதன் மூலம் இளைப்பாறவும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன இதனால் புயலை கழுகுகள் பெரிதும் விரும்புகின்றன.

5. ஆண் கழுகுக்கு பரீட்சை

பெண் கழுகு ஆண் கழுகின் மீது ஒரு பரீட்சையின் பின்பே நம்பிக்கை வைக்கும். பெண் கழுகு ஓர் ஆண் கழுகை சந்தித்து உறவு கொள்ளு முன், அந்த ஆண் கழுகுடன் நிலத்திற்குச் சென்று சிறு தடி போன்ற குச்சியை எடுக்கும். பின்பு மேலே ஆணுடன் உயரத்திற்குப் பறந்து சென்று அந்தக் குச்சியினைக் கீழே போட்டுவிட்டு காத்து கொண்டிருக்கும்.
நிலத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் குச்சியை ஆண் கழுகு விரட்டிச் சென்று, அது நிலத்தில் விழு முன் பிடித்து, அதை உயரப் பறக்கும் பெண் கழுகிடம் சேர்க்கும். பெண் கழுகு மீண்டும் குச்சியைக் கீழே போட்டுவிடும். ஆண் கழுகு பிடிப்பதற்காக கீழே செல்லும். இவ்வாறு குச்சியை வீழ்த்துவதும், எடுத்து வருவதுமாக பல மணி நேர பரீட்சை நடைபெறும். பெண் கழுகு ஆண் கழுகிடமுள்ள பொறுப்புணர்வை நிச்சயப்படுத்திக் கொண்டதும் அது உறவு கொள்ள இடமளிக்கும்.

4. கழுகு கூடு
கழுகு மிக உயரமான, கூர்மையான முற்களை உடைய மரக்கிளைகளில் அல்லது பாறை பிளவுகளில், மற்ற உயிரினங்களால் எளிதில் நெருங்க முடியாத இடத்தில் கூடு கட்டும், இடம் தேர்வானதும் ஆண் கழுகு முள், குச்சி, புல், வேர்கள், சிறு கற்காள் மற்றும் வைக்கோல் வைத்து லாவகமாக கூடுகட்டும். பின் பெண் கழுகு முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொறிக்கும்.
ஒரு சிலர் தங்களுடைய புது மனை புகுவிழாவின் போது, கழுகு கூட்டை எடுத்து வந்து அக்னியில் போடுவார்கள். இதற்க்கு காரணம், கழுகு கூட்டில், பல நன்மைகளை தரக்கூடிய மூலிகை குச்சிகள் இருக்கும். அந்த மூலிகைகள் மனிதர்களுக்கு கிடைப்பது அரிது என கூறப்படுகிறது.

3. ஆபத்து காலங்களில் கந்தக அமிலம்

எதிரிகளைத் தாக்கவும், தன்னுடைய முட்டைகளைப் பாதுகாக்கவும் ஆபத்து நேரங்களில் உடலில் இருக்கும் கந்தக அமிலத்தைக் கழுகுகள் உமிழ்கின்றன. கந்தக அமிலம் எந்த ஓர் உயிரினத்தின் மீது பட்டாலும் பட்ட இடம் கருகிவிடும்.

2. கழுகு குஞ்சுகளுக்கு பயிர்ச்சி

கழுகு குஞ்சுகளை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கூட்டில் வைத்து தாய் பறவை உணவு ஊட்டும். பிறகு தாய் கழுகு மென்மையான கூட்டினை நீக்கி விட்டு முட்கள் குச்சுகளை குத்துவது போல வைக்கும் இதனால் கூட்டின் ஓரத்திற்க்கு வரும் குஞ்சுகளை கீழே தள்ளிவிடும். குஞ்சுகள் நிலைதடுமாறி விழப்போகும்போது இறக்கைகளை விரித்து பறக்கமுயலும். ஆனால் பறக்க முடியாது. குஞ்சுகள் கீழே விழுந்து அடிபடாமல் ஆண் கழுகு பறந்து சென்று தன் முதுகில் தாங்கி மீண்டும் கூட்டிற்க்கு கொண்டு வந்து சேர்க்கும். இது போல் தொடர்ந்து பயிற்ச்சியளித்து குஞ்சுகளை பறக்க வைத்து இறை தேடும்.

இவ்வளவு கெத்தா வாழும் கழுகின் சோகமான வாழ்க்கை 40 வயதிற்கு பின் தான் ஆரம்பமாகும் என்பது தான் வேதனையே.

1. 40 வயதில் கழுகின் மறுபிறவியும், சோதனையும் வேதனையும்
கழுகு தன் 40 வயதை அடையும்போது, அதன் அலகு இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயனற்றதாகிவிடும். அதன் அலகும் வளைந்து விடும். அதன் இறக்கைகளும் தடித்து, பறப்பதற்குக் கனமாக மாறிவிடும். இந்த நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலிமிக்க நிகழ்ச்சிக்குத் தன்னையே உட்படுத்துவது இவை தான் கழுகுக்கு இருக்கும் இரண்டு வாய்ப்புகள்.

இந்தக் காலத்தில், கழுகு உயர்ந்த மலைக்குப் பறந்து சென்று அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை தான் கூட்டிலேயே தனித்திருக்கும். புதிய அலகு வளர்ந்த பின் இறகுகளைத் தானே பிய்த்தெடுக்கும். ஐந்து மாதங்களுக்குப் பின் புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும். இந்த மாற்றத்துக்குச் சுமார் 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்திருந்து, வலியை அனுபவித்து, மறுபிறவி அடைந்த கழுகு இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக மாறும்.

No comments:

Post a comment