HybridAnalyzer Tamil

Hot

Monday, 18 January 2021

இது தெரிஞ்சா நீங்களும் துப்பாக்கி வைத்து கொள்ளலாம்!

January 18, 2021 0

 துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன?, துப்பாக்கி வைத்திருக்க தகுதி உடையவர்கள் யார்? என்பது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.


துப்பாக்கி உரிமம்:

தமிழகத்தில் நடந்துள்ள சில துப்பாக்கி சூடு சம்பவங்களில் முறைப்படி உரிமம் பெற்ற துப்பாக்கிகள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய சம்பவங்களினால் துப்பாக்கி உரிமம் பெற்றவர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிவர கண்காணிக்கிறார்களா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.



 அதே நேரத்தில் நிறைய பேர் மனதில் துப்பாக்கியை யார் யார் வாங்க முடியும் என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. அதற்கான நெறிமுறைகள் பின்வருமாறு.

எங்கு, எப்படி உரிமம் பெறுவது:

ஒருவருக்கு துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் தேவைபட்டால், அவர் சென்னையை சேர்ந்தவராக இருந்தால் காவல் ஆணையர் அலுவலகம் அல்லது மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட நபர் நேரடியாக அந்தந்த அலுவலகத்தில் தனது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.



அந்தப் விண்ணப்பத்துடன் குறிப்பிட்ட நபரின் அடையாள சான்று, இருப்பிட சான்று, மனநல தகுதி சான்று மற்றும் சொத்து விவரங்கள் அடங்கிய கோப்புகளை இணைக்க வேண்டும். அதனுடன் தேவைக்கு ஏற்ப வங்கியில் பணப் பரிவர்த்தனை விவரங்கள், வருமான வரி தொடர்பான விவரங்கள் போன்றவற்றையும் இணைக்க வேண்டி இருக்கும். ஒருவேளை கொலை மிரட்டல் அல்லது வேறு ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால் அதைப்பற்றிய காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்ததற்கான  FIR - முதல் தகவல் அறிக்கை நகலையும் இணைக்கலாம்.

எப்போது உரிமம் கிடைக்கும்:

அந்த அனைத்து ஆவணங்களையும் பரிசோதனை செய்யும் அதிகாரிகள் அவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்து, விண்ணப்பதாரரை நேரடியாக சந்தித்து விசாரணை நடத்துவார்கள். இந்த விசாரணைகளின் முடிவில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு துப்பாக்கி தேவையா அவர் துப்பாக்கி வைத்திருக்க தகுதி உடையவரா என்பதை முடிவு செய்வார்கள்.



இதன் ஒரு பகுதியாக துப்பாக்கி உரிமத்திற்கான விண்ணப்பித்தவரின் மேல் ஏதேனும் குற்ற வழக்குகள் இருந்தால் அவரது விண்ணப்பத்தை உடனடியாக நிராகரித்து விடுவார்கள். அதேபோல வேறு ஏதேனும் சந்தேகங்களை முன்னிறுத்தியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பத்தை நிராகரிக்க முடியும்.

இந்த அனைத்து விதிமுறைகளையும் ஒருவர் சரிவர கடைபிடித்து தேர்ச்சி பெறும் போது அவருக்கு துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் வழங்கப்படும்.

உரிமம் கிடைத்த பிறகு செய்ய வேண்டியவை:

துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் கிடைத்து மூன்று மாதங்களுக்குள் அந்த உரிமத்தின் அடிப்படையில் துப்பாக்கியை சம்பந்தப்பட்ட நபர் வாங்கிவிட வேண்டும். அதனுடன் 10 தோட்டாக்கள் வரை வாங்கிக் கொள்ளலாம். அந்த ஒவ்வொரு தோட்டாவிற்கும் அந்த தோட்டாவை வாங்கியவர் தான் பொறுப்பு.

உரிமத்தின் செல்லுபடி காலம்:

 பொதுவாக துப்பாக்கி உரிமத்தின் செல்லுபடி காலம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள். அந்த உரிமம் காலாவதியாகும் நாளிருக்கு முன்பாக அதனை புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்க தவறினால் அந்த உரிமம் செயல் இழந்ததாகக் கருதப்படும்.

முக்கிய குறிப்புகள்:

 உரிமம் வைத்திருப்பவர் வெளிமாநிலம் செல்லும்போது பயணம் பற்றிய தகவலை காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்.

ஒருவேளை வெளிநாடு செல்வதாக இருந்தால் தனது துப்பாக்கியை தற்காலிகமாக காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.



தனக்கு துப்பாக்கி தேவையில்லை என்று நினைக்கும் போது அதனை அரசின் அனுமதியோடு செயல்படக்கூடிய துப்பாக்கி விற்பனை மையங்களில் நிரந்தரமாக ஒப்படைக்கலாம்.

துப்பாக்கியை வாங்குவதற்காக போலியான ஆவணங்களை சமர்ப்பித்தாலோ அல்லது வாங்கிய துப்பாக்கியை வைத்து வனவிலங்குகள் அல்லது வன பகுதிகளில் உள்ள மரங்களை சேதப்படுத்தினாலோ அவர் மீது அதற்கான பிரிவுகளில் குற்ற வழக்குகள் தொடர முடியும்.

Read More

Sunday, 13 December 2020

முரண்பாடாக பிறந்த 10 பிராணிகள்! 10 Most Unusual Mutant Animals!

December 13, 2020 0


பொதுவாக ஒரே இனத்தைச் சேர்ந்த எல்லா விலங்குகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தால் அது கண்டிப்பாக இல்லை. ஒவ்வொரு விலங்கும் மாறுபட்ட தோற்றத்தில் தான் இருக்கும். அந்த வித்தியாசம் அந்த விலங்குகளுடன் நெருங்கி பழகும் போது தான் தெரியும். ஆனால், சில விலங்குகள் பிறக்கும்போதே மிகவும் வித்தியாசமான தோற்றம் பண்புகளோடு பிறக்கும் அதனால் அவற்றைப் பார்த்த உடனே அது வித்தியாசமாக இருக்கிறது என கண்டுபிடிக்சில விலங்குகள் பிறக்கும்போதே மிகவும் வித்தியாசமான தோற்றம் பண்புகளோடு பிறக்கும் அதனால் அவற்றைப் பார்த்த உடனே அது வித்தியாசமாக இருக்கிறது என கண்டுபிடிக்க முடியும். அப்படி வித்தியாசமாக பிறந்த வினோதமான பிராணிகளைப் பற்றி தான் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.



 

Read More

Friday, 11 December 2020

விலங்கு வயிற்றில் கிடைத்த 9 வினோத பொருட்கள்!

December 11, 2020 0
                  

பொதுவாக அனைத்து விலங்குகளுக்கும் தனக்கு என்ன உணவு தேவை என்பது நன்றாக தெரியும். எனவே அவை தனக்கான உணவை மட்டும் தான் சாப்பிடும். ஆனால், தவறு செய்யும் பழக்கம் மனிதர்கள் போலவே விலங்குகளுக்கும் உண்டு. எனவே, சில விலங்குகள் சில நேரங்களில் தவறான பொருட்களை தனக்கான உணவு என நினைத்து சாப்பிட்டு பிரச்சனைகளில் சிக்கின்றன. அப்படி பிரச்சனையில் சிக்கிய விலங்குகளின் வயிற்றில் இருந்து கிடைத்த மிகவும் வித்தியாசமான பொருட்களை பற்றி தான் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

Read More

Wednesday, 9 December 2020

கட்டை விரல் நீளம் மட்டுமே வளரும் குட்டி குரங்குகள்.!

December 09, 2020 1

ங்கிலாந்தில் உள்ள செஸ்டர் (Chester) உயிரியில் பூங்காவில் உலகத்திலேயே சிறிய வகை குரங்கான மார்மோசெட் எனப்படும் அரிய வகை குக்குரங்கினங்கள் உள்ளன. இந்த உயிரியல் பூங்காவில் சோய் மற்றும் பால்டிரிக் என்ற குரங்குகளுக்கு கடந்த செப்டம்பர் 6 ம் தேதி இரட்டையர்களாக இரண்டு குரங்கு குட்டிகள் பிறந்தன. இந்த குக்குரங்குகள் இப்போது வெறும் 5 சென்டி மீட்டர் நீளமே உள்ளன. அதன் எடை  வெறும் 10 கிராம்  மட்டுமே இருக்கிறது. இந்த அழகு குரங்கு குட்டிகள் இப்போது பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.


 குக்குரங்கு என்பது உலகிலேயே மிகவும் குட்டியான குள்ளக்குரங்காகும். இந்த வகை குக்குரங்குகள் தென்அமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில் வாழக்கூ டியவை. மிகவும் சிறிய உருவுடன் காணப்படும், இந்த குரங்குகளின் வாலை விட்டுவிட்டுப் பார்த்தால் உடல் நீளம் 14 முதல் 16 செமீ மட்டுமே இருக்கும். வளர்ந்த குரங்குகளின் மொத்த எடையே 100 கிராம் வரைதான் இருக்கும்.

பிக்மி மார்மோசெட் (Pigmy Marmoset)எனப்படும் இந்த வகை குக்குரங்குகள் மரங்களில் வடியும் பிசினைத்தான் உணவாக உண்ணுகின்றன. இந்த குரங்குங்கள் இயற்கையில் ஏறத்தாழ 11 அல்லது 12 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. ஆனால் உயிரியல் பூங்காக்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றன. அளவில் குட்டியாக இருந்தாலும் இந்த குக்குரங்குகள் மரத்திற்கு மரம், கிளைக்கு கிளை 16 அடி வரை ஒரே தாவாக தாவக்கூடியவை.

இந்த அரிய வகை குக்குரங்குகள் ,பொதுவாக பிறக்கும்போது இரட்டை குரங்குகளாகத்தான் பிறக்குமாம். அது போலவே இந்த செஸ்டர் உயிரியல் பூங்காவில் பிறந்துள்ள இந்த அதிசய இரட்டைப்பிறவி குட்டி குரங்குகள் தாய் குரங்கிடம் உணவு எடுத்துக்கொள்வதும், தாயுடன் கொஞ்சி விளையாடி அதன் முதுகிலேயே சுகமாக பயணிப்பதும் பார்ப்பதற்கே வேடிக்கையாகவும் சுவாரஸியமாகவும் இருக்கின்றது. இந்த அதிசய இரட்டைப்பிறவிகளை பார்க்க உயிரியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. 

இந்த உயிரியல் பூங்காவின் விலங்குகள் காப்பாளர் ஹோலி வெப், ”இந்த குக்குரங்குகள் இப்போது ஒரு எலுமிச்சை பழம் அளவிலேயே உள்ளன. அப்படியானால் இவை பிறக்கும் போது எந்த அளவில் இருந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்” என்று கூறியுள்ளார்.

Read More

Sunday, 6 December 2020

காண்பவர்களை மிரள வைக்கும் 10 வினோதமான அரிய வகை சிலந்திகள்

December 06, 2020 0

பொதுவாக சிலந்திகள் நிறைய பேரை பார்க்கும்போதே பயமுறுத்தும் ஒரு சின்ன உயிரினம். அதில் சில வகை சிலந்தி பயமுறுத்துவது மட்டுமில்லாமல் தனது விஷத்தால் கொலையும் செய்யும். ஆனால் மொத்தமாக உள்ள 43 ஆயிரத்துக்கும் அதிகமான சிலந்தி இனங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக தான் இருக்கும்.



சில சிலந்தி சாதாரணமாகவும், இன்னும் சில அரிய இனமாகவும், வேறு சில சிலந்திகளை பற்றி கேட்கும்போது மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம். அப்படி ஆச்சரியத்தக்க பண்போடு இருக்கும் சில அரிய வகை சிலந்தி இனங்களைப் பற்றி தான் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.


Read More

Friday, 27 November 2020

இனி கம்பெனிகாரரை திட்டாதீங்க!குழந்தைகளுக்கான சிப்ஸ் பாக்கெட் ஏன் காற்றால் பெருத்திருக்கிறது தெரியுமா?

November 27, 2020 0

உடலுக்கு கேடு என்று நமக்கெல்லாம் தெரிந்திருந்தாலும் நம் குழந்தைகளுக்கு கவர்ச்சிகரமாக தொங்கும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட்களை வாங்கிக் கொடுப்பதை நாமும் நிறுத்துவதாக இல்லை. அதற்கு பதிலாக கடலை மிட்டாய், எள்ளு உருண்டை ஆகியவற்றை வாங்கிக்கொடுத்தால் நல்லது. ஆனாலும் நாம் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட்களைக் கொடுக்கிறோம்.

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் இந்த பாக்கெட்டில் நான்கே நான்கு சிப்ஸை வைத்துக்கொண்டு காற்றை மட்டுமே நிரப்பி பலூன் போல் ஊதிவைத்திருப்பதையும் பார்க்கிறோம். அதைப் பார்ப்பவர்கள் இதை நினைத்து திட்டுவதையும் கேட்கிறோம். அதிலும் முகமே தெரியாத அந்த கம்பெனிக்காரனை திட்டுவதை நாம் ஒவ்வொருமுறையும் தொடர்கிறோம். ஆனால் அப்படி ஏன் வைக்கப்பட்டுள்ளது தெரியுமா?

நாம் பாக்கெட்டைத் திறந்ததும் புஷ் என காற்று போகிறதே…ஏன் சிப்ஸில் காற்று அடைக்கிறார்கள் தெரியுமா? ‘சிப்ஸ் பொதுவாகவே நொருங்கும் தன்மைக் கொண்டது. பாக்கெட்டில் காற்றை நிரப்பாமல் பேக் செய்தால் அது நொருங்கிவிடும். இதே காற்று நிரப்பப்பட்டால் ஒன்றின் மீது ஒன்று விழுந்தாலும் பெரொய அளவில் அழுத்தம் வராது. சிப்ஸ்ம் தயாரிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.

தேபோல் வெறும் சிப்ஸை அப்படியே பேக் செய்தால் பாக்கெட்டுக்குள் இருக்கும் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து விரைவில் நாசமாகிவிடும். இதனால் பாக்கெட்டில் நைட்ரஜன் வாயுவை நிரப்புவார்கள். இதனால் சிப்ஸ் சீக்கிரம் கெடாது. நைட்ரஜன் வாயுவை நிரப்புவதால் சிப்ஸ் கெட்டுப்போகாது என்பது தெரியாமல் வெறுமனே காற்றை நிரப்பி காசு வாங்குவதாக நாம் எத்தனை முறை திட்டியிருப்போம். ஆக, இனி அப்படி திட்டாதீங்க!

Read More

Thursday, 22 October 2020

பெரம்பலூர் அருகே கிடைத்த 12 கோடி வருட பழைய டைனோசர் முட்டைகள்!

October 22, 2020 0
12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகள் தமிழ்நாட்டின் பெரம்பலூர் அருகே கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
பெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. 

பெரம்பலூர் அருகே குன்னம் பெரிய ஏரியில் நேற்று மண் எடுத்து கொண்டிருந்தபோது, அம்மோனைட் எனப்படும், கடல்வாழ் நத்தைகளின் படிமங்களும் சிதைவுற்ற நிலையில் கிடைத்துள்ளது. மேலும் அந்த ஏரியில் டைனோசர் முட்டை போல் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்துள்ளன. அதனை புவியியல் ஆய்வாளர் வந்து பார்வையிட்டு, அது டைனோசர் முட்டையா?, இல்லையா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த கடல்வாழ் நத்தைகளின் படிமங்களையும், உருண்டை வடிவிலான படிமங்களையும் வருவாய்த்துறையினர் கைப்பற்றி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும் குன்னம் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்படிமங்களை அதே இடத்திலும் பாதுகாத்தும், சிலவற்றை அதன் அருகிலுள்ள பள்ளிகளிலும் சேகரித்து வைத்தும் உள்ளூர் அளவிலான காட்சியகங்கள் ஏற்படுத்தி பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல்படிமங்கள் கிடைக்கப்பட்டுள்ள பகுதிகளை தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று சமுக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த் டைனோசர் முட்டைகள் மாமிச கார்னோட்டாரஸ் (Carnotaurus) மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ சவுரபோட் டைனோசரின் முட்டைகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

டைனோசர் முட்டைகளாக இருந்தால் இது சுமார் 12 கோடி முதல் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தனித்துவமான கார்னோட்டாரஸ் டைனோசர்கள் தென் அமெரிக்க கண்டத்தில் சுற்றித் திரிந்தன, மேலும் சில அசாதாரண உடல் குணங்கள் இருந்தபோதிலும், அவை மிகவும் ஆதிக்கம் செலுத்தும் வேட்டையாடுபவைகளாக இருந்தன.

கார்னோட்டரஸ் வேகம் மற்றும் சுறுசுறுப்பான விலங்கினம், 1.5 டன் வரை எடையும், சுமார் 30 அடி நீளமும் கொண்டது. பெரிய கால் தசைகள் கொண்ட,மிகவும் திறமையான வேட்டையாடும் ஒன்று என கூறப்படுகிறது.
Read More

Sunday, 18 October 2020

கவிஞர் கண்ணதாசன் பற்றிய 35 சுவாரசியமான விஷயங்கள்!

October 18, 2020 0

1.கண்ணதாசனுடைய முதல் மனைவி பெயர் "லீலாவதி" . இவர் ஒரு விலைமகளாவார். திருமணமான சில மாதங்களிலேயே, கண்ணதாசனைப் பிரிந்துபோய் விட்டார். எனினும், இது முறையற்ற திருமணம் என்பதால், கண்ணதாசனின் திருமணக்கணக்கில் பதிவாகவில்லை.



2.கண்ணதாசன், எட்டுநாட்களில், ஏறத்தாழ 96 மணி நேரத்தில், குற்றாலத்தில், "இயேசு காவியம்" என்ற காவியத்தையே இயற்றிமுடித்தாா். இது ஒரு அசாத்திய சாதனை நிகழ்வாக இன்றளவும் உள்ளது.

3."அம்பிகை அழகு தரிசனம்" என்ற நூறு பாடல்களடங்கிய நூலையும், கண்ணதாசன் இயற்றியது, சாதனையான நிகழ்வாகும். இந்த நூலை, ஒரே நாளில் இயற்றினாரென்றும், மூன்றுநாட்களில் இயற்றினாரென்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

4.கண்ணதாசன், திருக்குரானுக்கும் உரையெழுத முயன்றார். இஸ்லாமியரின் கடும் எதிர்ப்பு காரணமாக, அம்முயற்சியைக் கைவிட்டார்.

5.கண்ணதாசன் எதிர்பார்த்தது போலவே, அவருடைய ரசனைக்கு, மிகவும் பொருத்தமாக ஒரு காதலி வாய்த்தார். அவர் பெயர் "பானு" என்பதாகும். கண்ணதாசன் இவரை மணந்துகொள்ள நினைத்தபோது, இவர் காலமாகி விட்டாா். அந்த வேதனையிலிருந்தபோதுதான், "வசந்தமாளிகை" படவாய்ப்பு வந்தது. அப்படத்தின் கதை, கிட்டத்தட்ட தன் காதல்கதை போலவே இருப்பதாக அவர் கருதியதால், அப்படத்தின் பாடல்களை, மேற்படியான தன்வாழ்வுச் சம்பவங்களைக் குறிப்பிடும்படியாக, மிக உணர்ச்சிப்பூர்வமானவையாகப் படைத்தார்.

6.கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த தமிழ்நடிகை தேவிகா ஆவார். இவருடைய வெளிப்படையான குணம், கண்ணதாசனுக்கு மிகவும் பிடிக்கும்.தான் தயாரிக்கவிருந்த நான்கு படங்களிலும், கண்ணதாசன், தேவிகாவை ஒப்பந்தம் செய்திருந்தார்.அப்படங்கள் எடுக்கப்படவில்லை.

7. எம்.ஜி.ஆரை வைத்து, "ஊமையன் கோட்டை" என்ற படத்தைத் தயாரிக்க, கண்ணதாசன் முடிவெடுத்தார். எம்.ஜி.ஆரின் தாமதத்தால், படம் தாமதமாகவே, அம்முயற்சியைக் கைவிட்டு, எம்.ஜி.ஆருக்கு தான் யாரென்பதைக் காட்ட விரும்பி, மார்க்கெட் இழந்து, பெருங்கடனாளியாகிவிட்டிருந்த டி.ஆர். மஹாலிங்கத்தை நாயகனாக்கி "மாலையிட்ட மங்கை" படம் தயாரித்தார். படம் அமோக வெற்றிபெற்றது. தனது விருப்பம்போல பாடல்களை எழுத, கண்ணதாசன் தயாரித்த முதல்படமான இப்படத்தில்தான், மனோரமா அறிமுகமானார். டி.ஆர்.மஹாலிங்கம் புதுவாழ்வு பெற்றார்.

8.கண்ணதாசன் மிக விரைவாக எழுதிய பாடல், "நெஞ்சில் ஓர் ஆலயம்" படத்தில் இடம்பெற்ற "முத்தான முத்தல்லவோ?" என்ற பாடலாகும்; மிக தாமதமாக எழுதிய பாடல், "நெஞ்சம் மறப்பதில்லை" படத்தில் இடம்பெற்ற "நெஞ்சம் மறப்பதில்லை" என்ற பாடலாகும். தாமதத்திற்கு, இவர் காரணரல்லர். இசைமெட்டு உருவாக்கத்தில் ஏற்பட்ட தாமதம்தான் காரணம்.

9."பெத்தடின்" போதை மருந்துக்கு அடிமையான கண்ணதாசன், எவ்வொரு முறிவு மருந்தின் உதவியுமின்றி, தன் மனஉறுதியாலேயே, ஒருசில நாட்களில், அப்பழக்கத்திலிருந்து மீண்டது அசாத்திய சாதனையாகும். இத்தனைக்கும் இவர் பயன்படுத்திய பெத்தடின் மருந்தின் அளவு மிகவும் அதிகமென்பது குறிப்பிடத்தக்கது.

10. தான் அமெரிக்காவிலிருந்து, சிகிச்சை முடிந்து திரும்பியதும் "மனோரமாவிற்கு" பாராட்டுவிழா எடுக்கத் திட்டமிட்டிருந்தார் கண்ணதாசன். அது நிறைவேறாமலேயே காலமாகிவிட்டார்.

11. "மூன்றாம்பிறை" படத்தோடு, பாடல்களெழுதுவதை நிறுத்திவிட்டு, நூல்களெழுதத் திட்டமிட்டிருந்தார் கண்ணதாசன். அமெரிக்காவில், சிகிச்சை முடிந்து திரும்பியதும், முழுநேர எழுத்தாளராக மாற நினைத்திருந்தவரை, விதி விடவில்லை.

12. 54 வயதிற்குள், சுமார் 4500 படப் பாடல்கள், சுமார் 4000 கவிதைகள், 6 படங்கள் தயாரிப்பு, எண்ணற்ற நூல்கள், கடன் தொல்லைச் சிக்கல்கள், அரசியல் பேச்சுக்கள், 3 திருமணங்களில் 14 குழந்தைகள், பல படங்களுக்குக் கதை−வசனம்,7 பத்திரிக்கைகளில் ஆசிரியர்−எழுத்தாளர் பொறுப்புக்கள், பல கவியரங்க நிகழ்வுகள், விலைமகளிர் தொடர்புகள் என கண்ணதாசன் வாழ்வியல் சம்பவங்களை நினைத்தால், இவை எப்படி சாத்தியமாயின? என தலையே சுற்றும். அவருக்கோ இவை சர்வசாதாரண நிகழ்வுகளாக இருந்தன.

13. எம்.ஜி.ஆரைக் கடுமையாகச் சாடியவர் கண்ணதாசன். ஆனால், எம்.ஜி.ஆர் இவற்றை மனதில் கொள்ளாமல், அரசவைக்கவிஞராக கண்ணதாசனையே நியமித்தார்.

14.கண்ணதாசனுக்கு, மதுப்பழக்கத்தை, புதுக்கோட்டையில் கற்றுத்தந்தவர், "கம்பதாசன்" என்ற பாடலாசிரியராவார். காதல் தோல்வியால், பெருங்குடியராக மாறினார். இவருடைய வேகமாக பாடல் எழுதும் திறமை, டப்பிங் படங்களுக்கு விரைவாக வசனமெழுதும் திறமை ஆகியன கண்ணதாசனுக்கு உந்துதலாக அமைந்தன.

15.கண்ணதாசனின் சொந்த படமான "கவலையில்லாத மனிதன்" படம், அப்படத்தின் நாயகனான சந்திரபாபுவின் கால்ஷீட் சொதப்பல்களால், காலதாமதமாக வெளியாகி, படுதோல்வியடைந்தது. அக்கடனிலிருந்து மீள கண்ணதாசனுக்கு நீண்டகாலமானது. பிற்காலத்தில் சந்திரபாபு, "தட்டுங்கள் திறக்கப்படும்" என்ற சொந்த படத்தை, கடும் வறுமைக்கிடையில் தயாரித்து, இயக்கி, நடித்தபோது, பாடல்களெழுத, கண்ணதாசன் உதவியை நாடினார். கண்ணதாசன், பழைய நிகழ்வை மனதில் கொள்ளாமல், கொடுத்ததை வாங்கிக் கொண்டு, சந்திரபாபுவிற்குப் பாடல்கள் எழுதித் தந்தார்.

16. கண்ணதாசன், பெரும்பாலும் மெட்டுக்களுக்குப் பாட்டெழுதுவதையே விரும்புவார். ஆரம்ப காலங்களில், தன் கைப்பட பாடல்களெழுதியவர், பிற்காலங்களில், தான் சொல்லச்சொல்ல, உதவியாளர்கள் மூலம் எழுதச்செய்தார்.

17. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர் டி.ஆர்.சுந்தரம், கறாருக்கும், கண்டிப்பிற்கும் பிரபலமானவர். பெரிய நாயகர்களைக் கூட, திட்டியோ, அடித்தோ வேலைவாங்கக்கூடிய ஆளுமை கொண்டவர். ஆனால், கண்ணதாசனிடம் மட்டும், அவர் இறுதிவரை, இரக்கமும், அன்பும் கொண்டிருந்தார். இவரும், சின்னப்பாதேவரும், கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த தயாரிப்பாளர்களாவர்.

18. எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கிய முதல் படமான "நாடோடி மன்னனில்," கண்ணதாசனுக்குப் பாடல்களெழுத வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அதன் வசனத்தைச் சிறப்பாக எழுதிப் புகழ்பெற்றார் (வசன உதவியாளர் இரவீந்திரன்).

19. "பொண்ணுக்குத் தங்க மனசு" படத்தில் இடம்பெற்ற, "தேன் சிந்துதே வானம்" பாடல் மெட்டுக்குப் பாட்டெழுத, கண்ணதாசன் எடுத்துக்கொண்டது சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே. இதே பாடலின் தெலுங்கு மெட்டுக்குப் பாட்டெழுத, தெலுங்குப் பாடலாசிரியருக்கு, 3,4 நாட்கள் தேவைப்பட்டன.

20. இல்லறம்−துறவறம் பற்றிய சிறந்த போட்டிப் பாடலான "இது மாலை நேரத்து மயக்கம்" (படம்; தரிசனம்) பாடலை எழுத, கண்ணதாசன் எடுத்துக் கொண்ட நேரம், 45 நிமிடங்கள் மட்டுமே.

21.16 வயதிலேயே, சென்னைக்கு ஓடிவந்த கண்ணதாசன், முதலில் நடிகராகவே விரும்பி, "சந்திரசேகரன்" என்ற வேறுபெயரில், வாய்ப்பு தேடி அலைந்தார். ஆனால், எழுத்தாளர் வாய்ப்பே, அவருக்கு முதலில் வாய்த்ததால் எழுத்தாளரானார்.

22. மது பருகினால்தான் இவருக்குப் பாட்டெழுத வருமென்பதெல்லாம் பொய். பெரும்பாலும் பாடலெழுதும்போது மது பருகமாட்டார் என்பதே உண்மை.

23. உணவு, உறக்கம் இரண்டிலுமே கண்ணதாசன் அதிதீவிரப் பிரியராக இருந்தார். நன்கு தூங்கிவிட்டதாலேயே, தொடர்வண்டி பயணத்தைத் தவறவிட்டதும் உண்டு.

24. கண்ணதாசனுக்கு, திருக்குறள் முழுவதற்கும், புதுமையான கண்ணோட்டத்துடன் உரையெழுத பெரிதும் ஆர்வமும், திட்டமுமிருந்தது. ஆனால், காமத்துப்பாலுக்கு மட்டுமே, அவரால் உரைஎழுத முடிந்தது.

25. இவர் பாட்டெழுதும் சூழலே விசித்திரமாக இருக்கும். இவருடைய கடனாளர்கள், அறைவாசலில் நின்றபடி, கடனை வசூலிக்கக் காத்திருக்கும்போது கூட, இவர் அதை சட்டைசெய்யாமல், தீவிரமாக பாடலெழுதுவார். சில சமயங்களில், பாடலுக்கான சூழலை விளக்கும்போது, கண்ணதாசன் ஏதேனும் வேடிக்கையான நிகழ்வுகளைச் செய்தவாறு இருப்பார். பாட்டுச்சூழலை விளக்குபவர், தயங்கி நிறுத்திவிட்டால், அவர் முன்புகூறிய பாட்டுச்சூழல் விபரத்தை, துல்லியமாகக் கூறி, அவரைத் திகைக்க வைப்பார். பாட்டுச்சூழலைக் கூறியவுடன், பெரும்பாலும் 30 நிமிடங்களில், பாடலை எழுதிவிடுவார்.

26. எம்.ஜி.ஆருடைய அரசியலைப் பற்றி, இவரிடம் கருத்துகேட்டபோது, இவரளித்த பதில் " ஏட்டிலே தினத்தந்தி; பாட்டிலே எலந்தப்பழம்; நாட்டிலே எம்.ஜி.ஆர். இதுதான் இன்றைய நிலை" என்றாா்.

27. தி.மு.கவை விட்டு விலகிய போது, "போய் வருகிறேன்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய அக்கட்டுரை, தமிழில் தோன்றிய மிகச்சிறந்த அரசியல் கட்டுரைகளுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

28. திருப்பாவை, திருவெம்பாவை போல, கண்ணதாசன் எழுதிய "தைப்பாவை" கவிதையும் பிரபலமானது. தை மாதச் சிறப்புகளை அதில் வர்ணித்திருப்பார்.

29. தான் வளர்த்த நாய் "சீசர்" இறந்தபோது, அதற்கும் ஒரு இரங்கற்பா இயற்றினாா். வளர்ப்பு நாயின் மறைவிற்கும் இரங்கற்பா இயற்றிய முதல் இந்திய கவிஞர் கண்ணதாசன்தான்.

30. ஒருமுறை, கண்ணதாசன், தான் இறந்துவிட்டதாக, தானே பலருக்கும் தொலைபேசியில் விபரம் தெரிவித்தார். பலரும், பதறியடித்து ஓடிவர, தன்மீதான சமூக மதிப்பைத் தானறிய இவ்வாறு செய்ததாக விளக்கமளித்தார்.

31. காமராஜர் வரலாற்றைப் படமாகத் தயாரிக்கத் திட்டமிட்டார் கண்ணதாசன். ஓரிரு காட்சிகள் எடுக்கப்பட்டதோடு, படம் நின்றுபோனது.

32. கண்ணதாசன் எழுதிய காவியங்களுள், ஒரு கவிதை கூட கிடைக்காமல், முழுமையாக அழிந்துபோன காவியம் "ஈழமகள் கண்ணீர்" என்பதாகும்.

33. "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில், ஒரு பாடல் சூழலுக்குப், பல பாடலாசிரியர்கள் மிக சிரமப்பட்டு எழுதியும், எம்.ஜி.ஆருக்கு அவை பிடிக்கவில்லை. இறுதியில், கண்ணதாசனை எழுதவைக்குமாறு, இயக்குநரிடம் கூறினார். அவ்வாறே கண்ணதாசன் ஒரே முறையில் எழுதிய அந்த பாடல், சூழலுக்குப் பொருத்தமாகவும், அனைவருக்கும் பிடித்தமானதாகவும் அமைந்து போனது. அந்த பாடல்தான், "அதோ அந்த பறவை போல" பாடலாகும்.

34. கண்ணதாசனின் பாடல்களுக்கு உந்துசக்தியாக விளங்கியவை, அவருடைய தாயார் விசாலாட்சி அம்மையார் அவர்கள் பாடிய தாலாட்டுக்களும், கம்பராமாயணம் காவியமுமே ஆகும்.

35. "அவன்தான் மனிதன்" படத்தில், இவரெழுதிய "அன்பு நடமாடும்" என்ற பாடலின் வரிகள் யாவுமே, இறுதியில் "மே" என்ற எழுத்திலேயே முடியும் சிறப்புடையது. இப்பாடலையும், இவர், மிக விரைவாக எழுதியதுதான் ஆச்சர்யமானது.

Read More

Saturday, 17 October 2020

இந்தியாவில் உள்ள மர்ம கோவில் சில கோவில்கள்!

October 17, 2020 0

சில மர்ம கோவில்கள்,

1) வீரபத்ரா கோயில்

கோயிலின் கூரையை தாங்க எழுபது தூண்கள் உள்ளன. இருப்பினும், சுவரில் ஒரு மூலையில் இருக்கும் தூண் தரையில் நிற்கவில்லை.

இந்த மர்ம கோயில் இந்த தொங்கும் தூணின் பின்னால் உள்ள மர்மத்தை தீர்க்க தவறிய பல பொறியாளர்களுக்கு சவால் விடுத்துள்ளது.

மேலும், கோயிலில் தரையில் பெரிய கால் தடம் உள்ளது. அந்த கால் தடம் மூன்று அடி நீளமாம். ஒரு ஈரப்பதமான நீர் நிலத்தடியில் இருந்து அதை ஈரமாக வைத்திருக்கிறது.

1910 ஆம் ஆண்டில், ஒரு பிரிட்டிஷ் பொறியாளர் தொங்கும் தூணின் ரகசியத்தை கண்டுபிடிக்க முயன்றார்.

அவர் தூணின் ஒரு மூலையை தரையில் தொடும்படி செய்தார். ஆனால், இது உச்சவரம்பை தவறாக வடிவமைத்து ஃப்ரெஸ்கோ( fresco ) ஓவியத்தை சிதைத்தது. தூனை மேலே இருந்து தொங்க வைப்பது இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது.

வீரபத்ரா கோயில் ஆந்திர பிரதேசத்தின் இனிதான் மாநிலத்தின் அனனத்பூர் மாவட்டத்தில் உள்ள லெபக்ஷியில் அமைந்துள்ளது. இந்த கோயில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

வீர பத்ரா கோவிலிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் நந்தி என்றும் அழைக்கப்படும் ஒரு பெரிய காளை உள்ளது, இது ஒரு கல் தொகுதியிலிருந்து செதுக்கப்பட்டுள்ளது, அதன் வகைகளில் மிகப்பெரியது என்று கூறப்படுகிறது.

2) கோனர்க் சூரிய கோயில்

இரண்டு மாபெரும் சிங்கங்கள் நுழைவாயிலைக் காவலில் காத்திருக்கும் இந்த கோயில் 7 குதிரைகளால் இழுக்கப்பட்ட 24 சக்கரங்களைக் கொண்ட தேராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோயிலின் சக்கரங்கள் உண்மையில் சூரியக் கடிகாரங்கள். துல்லியமான நேரத்தை முட்களால் போடப்படும் நிழல்களால் கணக்கிட முடியும்.

புத்த மதத்தின் (யானை) மீது பிராமண இந்து மதத்தின் (சிங்கம்) மேலாதிக்கத்தை குறிக்கிறது. ஒவ்வொரு யானையும் ஒரு மனித உடலின் மேல் அமைந்துள்ளது.

17 ஆம் நூற்றாண்டில் கோவில் கட்டமைப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது அல்லது அழிக்கப்பட்டது.

சூரியக்கோவில், இடிந்து விழுந்த கட்டமைப்பில் 52 டன் காந்தம் மேலே இருந்ததாக நம்பப்படுகிறது.

இந்த காந்தம் முக்கிய கட்டமைப்பு சிலை காற்றில் பறக்க காரணமாக அமைந்தது.

கிழக்கு-மேற்கு திசையில் சீரமைக்கப்படுவதால், இயற்கையான சூழலில் மணல் மண்ணில் வளரும் பிற வகை மரங்கள் உள்ளன.

இந்த கோயில் அதன் சிற்றின்ப சிற்பங்களுக்கு புகழ் பெற்றது, இது முதன்மையாக தாழ்வாரம் கட்டமைப்பின் இரண்டாம் மட்டத்தில் காணப்படுகிறது.

பதின்மூன்றாம் நூற்றாண்டின் சூரிய கோயில், ஒரிசா சிவப்பு மணற்கல் ( Khandolite ) மற்றும் கங்கை வம்சத்தைச் சேர்ந்த மன்னர் நரசிம்மாதேவா முதலாம் (கி.பி 1236-1264) என்பவரால் கட்டப்பட்ட கருப்பு கிரானைட்.

உலக பாரம்பரிய தளமான இந்த கோயில் இந்தியாவின் மத பாரம்பரியத்தை ஒரு விதிவிலக்கான தோற்றத்தை வழங்குகிறது.

3) பத்மநாப சுவாமி கோயில்

இது உலகின் பணக்கார கோயில் என்று அழைக்கப்படுகிறது. இருபத்தி இரண்டு பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் மற்றும் நகைகள் நிலத்தடி பெட்டகங்களில் சேமிக்கப்படுகின்றன. எட்டில் ஐந்து மட்டுமே இன்று வரை திறக்கப்பட்டுள்ளன.

கோயிலின் இரண்டாவது பெட்டகம் மிகவும் மர்மமானது மற்றும் திறக்கப்படாமல் உள்ளது.

பெட்டகத்தின் ஒரு அறை ஒரு மகத்தான இரும்புக் கதவுடன் மூடப்பட்டுள்ளது கதவு இரண்டு பிரம்மாண்டமான நாகப்பாம்புகளைக் கொண்டுள்ளது.

ஒரு விசித்திரமான மந்திரத்தால் மட்டுமே கதவைத் திறக்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த அறையை வேறு வழியில் திறப்பது பெரும் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

பத்மநாப சுவாமியின் சிலையின் அளவு மிகவும் விரிவானது, பக்தர்கள் அவரை மூன்று கதவுகள் வழியாகப் பார்த்து அவரது தரிசனத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.

முதல் கதவிலிருந்து, தெய்வத்தின் தலையைக் காணலாம், மையத்தில் உள்ள கதவிலிருந்து, ஒரு பக்தர் கர்த்தருடைய தொப்புளிலிருந்து தாமரை பூப்பதைக் காணலாம் மற்றும் கடைசி ஒன்றிலிருந்து அவரது கால்களைக் காணலாம்.

விஷ்ணு பகவான் லட்சுமி தேவி (ஸ்ரீ தேவி என்றும் அழைக்கப்படுகிறார்) மற்றும் பூ தேவி (பூமியின் தெய்வம்) ஆகியோருடன் காணப்படும் அந்த ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த தெய்வத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், விஷ்ணுவின் வலது கை ஒரு சிவலிங்கத்தின் மீது உள்ளது. சுவாரஸ்யமாக, பிரதான சிலை நேபாளத்தின் கந்தகி ஆற்றில் இருந்து சேகரிக்கப்பட்ட 12,008 ஸ்லிகிராமங்களால் ஆனது மற்றும் தெய்வத்தை பாதுகாக்கும் கட்டுசர்கரா யோகம் என்ற ஆயுர்வேத பேஸ்ட்டால் மூடப்பட்டுள்ளது, இது நம்பப்படுகிறது.

கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம், விஷ்ணுவின் பெயரிடப்பட்டது, அதாவது ‘அனந்த நகரம்’ (நித்திய இறைவனின் நகரம்). பத்மநாப சுவாமி என்று அழைக்கப்படும் முதன்மை தெய்வம், விஷ்ணுவின் தொப்புளில் இருந்து பூக்கும் தாமரையின் மீது அமர்ந்திருக்கும் பிரம்மாவின் (படைப்பாளி) தோற்றத்தை சித்தரிக்கிறது.

4) கைலாச கோயில்

இந்த கோயில் இந்தியாவில் எல்லோரா குகைகளில் அமைந்துள்ளது.

கோவில் கட்டுமானத்தின் உண்மையான தேதி தெரியவில்லை. ஆனால், சுவர்களில் கல்வெட்டுகள் எட்டாம் நூற்றாண்டில் காணப்படுகின்றன.

இந்த கோயில் ஒரு பெரிய கல்,காரணம் ஒற்றை பாறையிலிருந்து செதுக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய நான்கு லட்சம் டன் பாறைகளை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டியிருக்க வேண்டும்.

எப்படி தொழிலாளர்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, சுத்தியல் மற்றும் உளி ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி இந்த கோவிலை செதுக்க முடிந்தது?

செங்குத்து அகழ்வாராய்ச்சி முறையால் மட்டுமே கட்டப்பட்டிருக்க முடியும்.செதுக்குபவர்கள் பாறையின் உச்சியில் தொடங்கி கீழ்நோக்கி அகழ்வாராய்ச்சி செய்தனர்.

இந்த கோயில் உலகின் மிகப் பெரிய பாறை உச்சவரம்பைக் கொண்டுள்ளது.

5) பிரிஹதீஸ்வரர் கோயில்

அதிசயங்கள் சில:

  • பிரதான கோபுரத்தின் நிழல் ராஜா கோபுரம் தரையில் விழாது.
  • ராஜா கோபுரம் ஒரு வெற்று வடிவத்தைக் கொண்டிருக்கிறது, மேலும் பெரிய கற்களை பூட்டுவதன் மூலம் ஆனது, அவை எந்த பிணைப்பு பொருட்களும் இல்லாமல் இருக்கும். இது 10 நூற்றாண்டுகளாக அனைத்து இயற்கை பேரழிவுகளையும் தாங்கி நிற்கிறது.
  • முதன்மை தெய்வத்திற்கு மேலே ஒரு சிறிய படிக்கட்டு கோபுரத்தின் மேல் பகுதிக்கு செல்கிறது. வெற்று பகுதிக்குள் மந்திரம் ஓ.எம் என்று கோஷமிடுவது தெய்வீக அதிர்வுக்கு வழிவகுக்கிறது என்று கூறப்படுகிறது.
  • 1000 ஆண்டுகளுக்குப் பிறகும் ஓவியங்களின் நிறங்கள் இன்னும் பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கின்றன.
  • ராஜ ராஜ சோழர் காலத்தில் சிற்பமாக வடிவமைக்கப்பட்ட நந்தியின் சிலை தஞ்சை நந்தி அளவு வளர்ந்து கொண்டே இருந்தது என்று ஒரு உள்ளூர் புராணக்கதை உள்ளது. இருப்பினும் கொடுக்கப்பட்ட விளக்கம் என்னவென்றால், இது தனித்துவமான வானிலை காரணமாக இருக்கலாம் மற்றும் அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம், அது ஒதுக்கி வைக்கப்பட்டு தரையில் அறைந்தது.
  • பிரிஹதீஸ்வரர் கோயிலின் அதிசயங்களில் இன்னொன்று, அந்த பாரிய கற்களை அவர்கள் எவ்வாறு பெற்றார்கள்? இந்த கோவிலின் இருப்பிடத்தில் கிரானைட் கல் இல்லை. இந்த வலிமையான கோவிலை உருவாக்க பயன்படும் கல் அனைத்தும் கிட்டத்தட்ட 50 மைல் தொலைவில் உள்ள தொலைதூர பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டது.
  • யானைகள் இல்லாமல் அந்த இடத்திலிருந்து பாறைகளை கொண்டு செல்லும் இந்த வேலை சாத்தியமில்லை என்று கருதப்படுகிறது. 1000 என்பது வெறும் எண்! இந்த கோயிலின் கட்டுமானத்திற்கு 1000 க்கும் மேற்பட்ட யானைகள் பயன்படுத்தப்பட்டன.
  • இந்த கோயிலுடன் தொடர்புடைய மற்றொரு மர்மமான உண்மை என்னவென்றால், சோழர் காலத்தின் வெவ்வேறு கோயில்களை இணைக்கும் பல நிலத்தடி பத்திகளும் உள்ளன.
    அதோடு, கோயிலுக்குள் இரகசிய பத்திகளும் உள்ளன, அவை மன்னர்களின் அனைத்து ரகசிய இடங்களையும் இணைத்தன. அவற்றில் பல சீல் வைக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மேலும், இது போன்ற கூடுதல் தகவல்களை அறிய

நான் ஒரு தமிழ் வலைத்தளத்தை ஆரம்பித்தேன்,விரும்பினால் ஆதரிக்கலாம்.

Read More

Tuesday, 21 April 2020

ஊரடங்கால் உலகம் மாறியதை காட்டும் 10 புகைப்படங்கள்! Photos That show Before and After Corona Infection in tamil

April 21, 2020 2

அட இது தான் அந்த இடமா.? என்று முட்ட முட்ட பார்க்கும் அளவுக்கு, லாக்-டவுன் நேரத்தில் மாற்றம் கண்டுள்ளன ஒரு சில முக்கிய இடங்கள். மூச்சு முட்டும் புகை, கால் வைக்க முடியாத அளவுக்கு குப்பை, குடலை பிடுங்கும் நாற்றம் என்று மனிதர்களால் அலங்கோலமாகிய பகுதிகள் எல்லாம், இன்றைக்கு இயற்கை வாசத்தில் மணக்கின்றன. ஒரு பக்கம் லாக்-டவுன் வித்தியாசமான உணர்வை நமக்கு கொடுத்தாலும், இன்னொரு புறம் புது உலகை படைத்துக்கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனம். இயற்கை தன்னைத்தானே கட்டமைத்துக்கொள்கிறது என்பதற்கு இதுவல்லவா ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. ஊரடங்குக்கு முன்பு, பின்பு உலகம் எப்படி மாறியிருக்கிறது என்பதை, அடுத்து வரும் படங்களை பார்த்து வியக்கலாம்.

1. Talawe wetland, மும்பை

before-lock-down lock-down after-lock-down

2. கங்கை நதி, ஹரித்துவார்

before-lock-down lock-down after-lock-down

3. Kruger National Park, South Africa

before-lock-down lock-down after-lock-down

4. Miami கடற்கரை, புளோரிடா

before-lock-down lock-down after-lock-down

5. JJ Flyover, Mumbai

before-lock-down lock-down after-lock-down

6. Llandudno, Wales

before-lock-down lock-down after-lock-down

7. Haridwar சாலை

before-lock-down lock-down after-lock-down

8. Los Angeles, அமெரிக்கா

before-lock-down lock-down after-lock-down

9. Vrishabhavathi ஆறு, பெங்களூரு

before-lock-down lock-down after-lock-down

10. திருமலை, திருப்பதி

before-lock-down lock-down after-lock-down

ஒரு மாத காலத்திற்குள் எத்தனை மாற்றங்கள், இவ்வளவு காலம் தன்னைத்தானே புதுப்பித்து வந்த இயற்கையை எந்த அளவுக்கு மாற்றி வைத்துள்ளோம் என்பதற்கு இவைகளே சாட்சி.

Read More